தங்க நகை வியாபாரிகள் பல கோடி வரி ஏய்ப்பு: தொடர்கிறது அதிரடி சோதனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, முன்னணி தங்க நகை வியாபாரிகளுக்கு சொந்தமான கட்டடங்களில், மத்தியஅரசின் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ளமுன்னணி தங்க நகை வியாபாரிகள் பலர், வேறு பொருட்களின் பெயர்களை குறிப்பிட்டு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இது தவிர வேறு பல வழிகளில், தங்க இறக்குமதியில், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், மத்திய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க, தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும்படி, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவர்களும், விமானங்கள் மூலம் இந்திய விமான நிலையங்களுக்கு வரும், சரக்குகளை, பொருட்களை ஒன்றுக்கு இரண்டு முறை தீவிரமாக பரிசோதித்தனர்.இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள தங்க நகை வியாபாரிகளுக்கு சொந்தமான கட்டடங்களில், மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறையினர் அதிரடி சோதனையை துவக்கினர்.

கடந்த வாரம் தலைநகர் டில்லியில் துவங்கிய இந்த சோதனை, உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என, தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்த சோதனையின் பலனாக, தங்க நகைகள் மற்றும் தங்க வியாபாரிகள் பலர், 10 கோடி ரூபாய்க்கு மேல் சுங்க வரி செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அதிலும், டில்லியை சேர்ந்த ஒரு வியாபாரி மட்டும், எட்டு கோடி ரூபாயை, சுங்கத் துறைக்கு செலுத்தியுள்ளார்.அதேநேரத்தில், வெளிநாடுகளில் உள்ள சுங்கத் துறையின் உளவு பிரிவு அதிகாரிகளையும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு அனுப்பப்படும், பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.நேபாள எல்லைப் பகுதி வழியாக, தங்கம் கடத்தி வரப்படலாம் என்பதால், அங்கும் மத்திய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
29-டிச-201211:23:42 IST Report Abuse
R.Saminathan யார் யாரோ என்னனமோ பண்ணறாங்க அதனால நாமளும் சும்மா இருக்க கூடாதுன்னு இவங்களும் இந்த மாறி பண்றாங்க...
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
24-டிச-201209:10:15 IST Report Abuse
Raju Rangaraj சம்பளம் மற்றும் பென்சன் வாங்குபவர்களுக்கு வருமான வரியை குறைக்க இப்படிப்பட்ட தங்க முதலைகளை வேட்டை ஆடவும். நிறைய பணத்தை வரி ஏய்ப்பு செய்யும் முதலைகளை பிடித்து வசூலிக்கவும். இயற்கை செல்வங்களை கிரானைட் மணல் இரும்பு தாது போன்றவற்றை கொள்ளைடிக்கும் சீமான்களையும் அரசியல் போலிகளையும் பிடித்து வரி வசூலிக்கவும். இதெல்லாம் செய்யாமல் வெறும் வீராவேச அறிக்கைகள் மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-டிச-201208:10:31 IST Report Abuse
villupuram jeevithan ரசீது வாங்காமல் வாங்கும் மக்களை தான் குறை சொல்ல வைக்கிறது, இந்த செய்தி.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
24-டிச-201206:55:07 IST Report Abuse
ஆரூர் ரங நம்மில் எதனை பேர் நகை வாங்கும்போது பில் போடச் சொல்கிறோம்? வரி எயப்புக்காக ஹவாலா, தங்கக் கடத்தலை பொதுமக்கள் தானே ஊக்குவிக்கின்றனர்? அதிக தங்க இறக்குமதியால் நாட்டின் பொருளாதாரமே சிதைந்துகொண்டிருப்பது உண்மை .இருக்கும் அந்நிய செலாவணி தங்கம் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களுக்கே செலவழிந்தால் மற்றவற்றுக்கு எங்கு போவது? தங்க இறக்குமதியை தடை செய்தல் ஒரே நாளில் ரூபாய் மதிப்பு முப்பது விழுகாடுகூட உயரும்.மற்ற விலைவாசி குறையும். தாட்சண்யம் பாராமல் அரசு நடவடிக்கை தேவை
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
24-டிச-201204:59:00 IST Report Abuse
Baskaran Kasimani கமிசன் வாங்கிக்கொண்டு உள்ளே விட்டு விடுவதுதான் இதற்கு காரணம். சுங்கத்துறை, அயோக்கியர்கள் நிறைந்த துறை. அரசுக்கு பல லட்சம் கோடி வரி ஏய்ப்பு இங்குதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. சுங்கத்துறை அலுவலகங்களையும் அவர்களின் வீட்டையும் காமிரா மூலம் கண்கானித்தால் இவர்களை எளிதில் பிடித்து விட முடியும். ஞாயமான வரி விதித்தால் ஒரு வேளை மக்களாகவே வரி கட்டலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்