புதுடில்லி :நாட்டில் உள்ள ஆறு பெரு நகரங்களில், டில்லியில்தான், கடந்த ஆண்டில், அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்:கடந்த, 2011ம் ஆண்டில், டில்லியில், 453, மும்பையில், 221, பெங்களூரு, 97, சென்னை, 76, ஐதராபாத், 59, கோல்கட்டாவில், 46 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதேநேரத்தில், 2009ல் 404ம், 2010ல் 414 கற்பழிப்பு குற்றங்கள், டில்லியில் நிகழ்ந்துள்ளன.சென்னையில், 2009ல், 39 மற்றும் 2010ல் 47 கற்பழிப்புகள் நிகழ்ந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன.பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவங்களிலும், டில்லியே முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில், இதுதொடர்பாக, 556 வழக்குகள் பதிவாகியுள்ளன.அதற்கு முந்தைய ஆண்டுகளான, 2010ல், 550 மற்றும், 2009ல், 491 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மானபங்கம் தொடர்பாக, சென்னையில், கடந்த ஆண்டில், 73 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவை எல்லாம் அந்தந்த மாநிலங்களில் காவில்துறையில் பதிவு செய்யப்பட புள்ளி விவரங்கள்... தமிழகத்தில் 73 மட்டும் தான் என மார்தட்டிக்கொள்ள வேண்டாம்... இங்கு வழக்கை பதிவு செய்வது முதற்கொண்டு நீதிபதி முன் கொண்டு செல்லுவதுவரை காசு இருந்தால் மட்டுமே முடியும்... அப்பாவி ஜனங்கள் மானத்தை இழப்பதோடு இவர்களுக்கு தெண்ட செலவும் செய்ய வேண்டியது உள்ளது... அப்படியே காவல் துறை புகாரை மேற்கொண்டாலும் புகார் அளித்தவரையே சில பெரும்புள்ளிகளின் தூண்டுதலால் உள்ளே தள்ளி அவர்கள் பங்குக்கும் மேலும் சீரழிக்க தான் இருக்கிறார்கள்... இந்த லட்சணத்தில் இருக்கும் போது புள்ளிவிவர அடிப்படையாம்... தமிழகத்தில் குறைவாம்....ரொம்பவும் பீற்றிக்கொள்ள வேண்டாம்...
நோய்க்கு மருந்து போடுவதொருபுரமிருக்கட்டும். நோயின் காரணத்தை கண்டறிந்து சீர்படுத்துங்கள்...மாணவர்களின், இளைஞர்களின் ( ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ) வாழ்வில் தற்போதேற்பட்டிருக்கும் கலாச்சார சீரழிவை சரிபடுத்துங்கள். வாழ்வில் ஒழுக்க குணங்களை ஏற்படுத்துங்கள். ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நல்ல பெரியோர்க்கும் கீழ்படியும் பெருங்குணத்தை ஏற்படுத்துங்கள். செய்தியில் சொல்லப்பட்டுள்ள நகரங்களும் குற்ற எண்ணிக்கைகளும் காரணத்தை தெளிவாக சொல்லுகின்றனவே
கற்பழிப்பைக் கண்டிப்பதிலும் அவர்கள்தான் முதலிடம். இன்று நடக்கும் போராட்டைத்தை முன்னெடுப்பவர்கள் அவர்கள்தான். நம்மை மாதிரி எதற்கெடுத்தாலும் கருணாநிதியை இழுப்பவர்கள் அல்ல. ( தமிழகத்தைப் பொருத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழையாக இருந்தால் வெறும் விமர்சனத்தோடு நிறுத்திக்கொள்வோம். சாதி விஷயத்தில் மட்டும் ஒன்று சேர்வோம்.)

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.