சென்னை :""கடந்த ஆட்சியைப் பற்றி, ஜெயலலிதா, கடும் விமர்சனம் செய்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டார். இப்போது, மின்வெட்டு, விலைவாசி உயர்வு பற்றிப் பேசினால், வழக்குப் போடுகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்த, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில், விஜயகாந்த் பேசியதாவது:நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், போணியாகாது என்று பேசினர்; மக்கள் ஆதரவுடன், பெரிய கட்சியாக, இன்று தே.மு.தி.க., வளர்ந்திருக்கிறது. கட்சியில் இருந்து, யார் வெளியில் சென்றாலும், நான் கவலைப்படமாட்டேன்; மக்களும், தொண்டர்களும் என்னுடன் இருக்கிறார்கள்.கடந்த ஆட்சியைப் பற்றி, ஜெயலலிதா கடும் விமர்சனம் செய்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டார்.இப்போது, தமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு பற்றிப் பேசினால், வழக்கு போடுகின்றனர். மக்களுக்காக சிறை செல்ல, நான் தயாராக இருக்கிறேன்.
மின் வெட்டை தீர்ப்பதற்கு, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தாமல், கல்யாண மண்டபத்தில், லோக்சபா தேர்தல் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.கடந்த ஆட்சியில், 7,000 மெகா வாட் மின் உற்பத்திக்கு, கருணாநிதி திட்டம் தீட்டினார். அதை செயல்படுத்தி இருந்தால் கூட, மின்வெட்டு பிரச்னை தீர வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.இதையெல்லாம் பேசினால், "தி.மு.க.,விற்கு, "சப்போர்ட்' செய்து பேசுகிறேன்' என்று கூறுவார்கள். "சப்போர்ட்' பண்ண வேண்டும் என்றால், வேறு மாதிரியெல்லாம், "சப்போர்ட்' செய்வேன்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
"நல்லவர்களை தேடுகிறேன்':
முன்னதாக, பேராயர் எஸ்ரா சற்குணம் பேசுகையில், ""கருணாநிதிக்கும், விஜயகாந்துக்கும் நெருக்கம் உண்டு. கருணாநிதியை பாராட்டி, விஜயகாந்த் விழா எடுத்துள்ளார். அவரிடம் இருந்து, விஜயகாந்த் இப்போது விலகி இருக்கிறார். அதற்கு, நியாயமான காரணம் இருக்கும் என, நினைக்கிறேன். தமிழகத்தில் உள்ள இருளை அகற்ற, நல்லவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும்,'' என்றார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய விஜயகாந்த், ""நல்லவர்கள் யார் என்பதை, நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன். அதைக் கண்டுபிடிக்க, தெய்வம் எனக்கு வழிக்காட்டும்,'' என்றார்.
உயிர் காக்க நடவடிக்கை :
தற்கொலை, பிரச்னைகளுக்கு தீர்வாகாது என்பதை, டெல்டா மாவட்ட விவசாயிகள் உணர்ந்து, அத்தகைய முயற்சிகளை கைவிடவேண்டும். விவசாயிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உதவித்தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை, அரசு வழங்க வேண்டும். பயிர் காக்க முடியாவிட்டாலும், உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜயகாந்த், தலைவர், தே.மு.தி.க.,
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
\\\\ தற்கொலை, பிரச்னைகளுக்கு தீர்வாகாது என்பதை, டெல்டா மாவட்ட விவசாயிகள் உணர்ந்து, அத்தகைய முயற்சிகளை கைவிடவேண்டும். விவசாயிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உதவித்தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை, அரசு வழங்க வேண்டும். பயிர் காக்க முடியாவிட்டாலும், உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். //// நீ முடிஞ்சு வெச்சிருக்கியே, அதிலேர்ந்து கொடேன் உன்னோட காலேஜு மூலமா எத்தனை கோடி சேர்த்த? செத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பியா நீ? படிக்க உதவித் தொகை கொடுப்பியா நீ?
\\\\ "கருணாநிதிக்கும், விஜயகாந்துக்கும் நெருக்கம் உண்டு. கருணாநிதியை பாராட்டி, விஜயகாந்த் விழா எடுத்துள்ளார். அவரிடம் இருந்து, விஜயகாந்த் இப்போது விலகி இருக்கிறார். அதற்கு, நியாயமான காரணம் இருக்கும் என, நினைக்கிறேன். தமிழகத்தில் உள்ள இருளை அகற்ற, நல்லவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும்,'' என்றார். //// சற்குணம் ஐயா, உங்க பேருக்குத் தகுந்த மாதிரி இறைவனைத் தேடும் பணியில், தொழிலில் மட்டும் ஈடுபடுங்கள். மனிதனை இறைவனுடன் இணைக்கும் தொழிலே வேண்டியது வேறு தொழில் நமக்கு வேண்டாம்
நீங்கள் மக்களோடு கூட்டணி என்று சொல்லி மக்களை ஏமாற்றி கொல்லைபுரமாக அ தி மு க வுடன் கூட்டணி வைத்திங்க, அதற்க்கு தண்டனை தான் இந்த வழக்கெல்லாம், இனிமேலாவது உண்மையை சொல்லுங்க மக்களுக்கு உண்மையாய் உழையுங்கள், யாருடன் கூட்டணி என்பதை.......தெளிவாக .......தெளிவாக .....சொல்லுங்க. . இல்லேன்னா மக்கள் உங்களை மறந்துடுவாங்க .
அய்யகோ. அந்தோ பரிதாபம். செங்கண்ணன் பிழைப்பு படு திண்டாட்டம் ஆகிவிட்டது. காரணம் என்ன? மிக சரியான நேரத்தில் மிக மிக தவறாக இவர் எடுத்த முடிவு தான். அம்மா ஆட்சியில் அமர்த்த சில மாதங்களில் கூட்டணியை விட்டு எதற்காக இவர் வெளியேறினார்? கூட்டணியின் நோக்கம் என்ன? அதன் தத்துவம் என்ன என்பதை இவர் மஞ்சள் துண்டை கண்டு கற்றுக்கொள்ள வேண்டும். சரியோ தவறோ மக்களுக்கு நல்லது செய்ய வில்லை. ஆனால் மத்தியில் முதலில் பிஜேபி பிறகு காங்கிரஸ் என 12 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கொள்ளை அடிப்பதில் மஞ்சள் துண்டுக்கு நிகர் யாரும் இல்லை. ஒரு சரியான தலைவனாக திரு செங்கண்ணன் அவர்கள் தன்னை முன்னிறுத்துவதை தான் மக்கள் விரும்புகின்றனர். அதற்காகத்தான் இவரை ஜெயிக்கவும் வைத்தனர். ஆனால் இவர் இப்படி திண்டாடுவது இவருக்கு ஓட்டளித்த மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கும். ஆரம்பத்தில் சில காலம் அம்மாவுடன் ஒட்டி இருந்து தனது MLA களின் தொகுதிக்கு சிறிதளவேனும் நன்மை செய்த பிறகு இவர் கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தால் இந்த அளவு இவர் குழம்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது. மேலும் அல்லக்கைகளை அண்ட விட்டதன் மூலம் இவருக்கு கெட்ட பெயர் தான் கிட்டி உள்ளது. ஆகவே இவர் தனது கொள்கைகளை சீர் தூக்கி பார்க்க வேண்டிய நேரம் அதாவது சுய பரிசோதனை செய்யும் காலம் வந்து விட்டது. இப்போது இவர் மீண்டும் ஒரு தவறான முடிவு எடுப்பராயின் இவர் அரசியலில் வேரூன்றுவது சிரமமே.மக்கள் இவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அம்மா அவர்கள் இவரது இமேஜை டேமேஜ் செய்வதில் ஓரளவு வென்று விட்டார். ஆனால் அது முழு வெற்றி அல்ல என்பதை இவர் தனது பண்பான நடைமுறை வெளிபடுதுதலில் காட்ட வேண்டும். அவை நடவடிக்கைகளில் பங்கு பெற்று எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகு சேர்ப்பதன் மூலம் மீண்டும் மக்கள் மனதில் செல்வாக்கு பெறலாம்.அந்த செல்வாக்கு இவருக்கு மீண்டும் தனித்து நிற்கும் திராணியை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனை விடுத்து மஞ்சள் துண்டோடு கூட்டணி வைத்தால் அது திமுகவிற்கு மட்டுமே பலன் தரும். அத்தோடு தேமுதிகவிற்கு முடிவுரை எழுதி விடலாம். எனவே திரு செங்கண்ணன் அவர்கள் தனி சக்தியாக வேண்டுமா அல்லது விசி,பாமக மற்றும் மதிமுக போன்ற உபரி கட்சியாக வேண்டுமா என்பதை அவரது முடிவுக்கே விட்டு விடுவோம்.நன்றி. சிவா.
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் என்றும், முத்தமிழ் வித்தகர், ராஜராஜ சோழனின் மறு பிறவி, திராவிடம் கண்ட தீரர் என்றும், கல்லக்குடிகொண்ட கருணாநிதி என்றும், செம்மொழி கண்ட கோமான் என்றும், ஐந்து முறை முதல்வாரான கின்னஸ் சாதனையாளர் என்றும் பட்டங்களை குவித்து கொண்ட திரு. கருணாநிதி அவர்கள் விஜயகாந்த் அவர்களுடன் கூட்டணி அமைத்து தான் அரசியல் மறுவாழ்வு பெற வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதை நினைத்தால் மனம் நோகுகிறது. விதியே இதுவும் உன் செயலா [ இந்த சொற்றொடர் எமர்ஜெண்சி காலத்தில் கேள்வி பட்டதாக இருக்கிறதல்லவா ]

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.