Advertisement
இளையான்குடி குப்பைக்கழிவுகளால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
23:52

இளையான்குடி:இளையான்குடியில் சேகரமாகும் குப்பைகளை, சாயல்குடி - தஞ்சாவூர் மெயின் ரோட்டில் கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இளையான்குடி பேரூராட்சி 18 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.
இங்கு, அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, வண்டிகள் மூலம் மின்வாரிய அலுவலகம் அருகே கொட்டினர். அங்கு, அரசு அலுவலகங்கள் இருப்பதால், எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, இளையான்குடி அருகே சாலையூரில் சாயல்குடி - தஞ்சாவூர் மெயின்ரோட்டிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
பேரூராட்சியில், மக்கும், மக்கா குப்பைகளை பிரித்து கொட்டாமல், அப்படியே கொட்டி தீ வைக்கின்றனர். இதனால், புகை மூட்டம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தஞ்சாவூர் மெயின் ரோடாக இருப்பதால், புகை மூட்டத்தால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதோடு, வாகன விபத்துக்களும் அதிகரிக்கின்றன. இது தவிர, இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால், நோய் பரவும் அச்சம் ஏற்படுகிறது.
* இளையான்குடியை சேர்ந்த எம். அப்துல்ரசாக் கூறுகையில்,""பேரூராட்சியினர் குப்பை கொட்ட ஒதுக்கிய இடத்தில் கொட்டாமல், போக்குவரத்து நெரிசல் உள்ள ரோட்டில் கொட்டுகின்றனர். சுகாதார கேட்டால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது,'' என்றார்.
பேரூராட்சி நிர்வாகம், மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.