சென்னை :"விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், சம்பா பயிருக்கு, போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில், கருகிய பயிரைக் கண்டு மனம் வெதும்பி, வறுமையின் கொடுமை தாங்க முடியாமல், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இறந்து போகும் இந்த விவசாயிகளைப் பற்றி, தமிழகத்தில் ஆளும் அரசுக்கு, எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், தமிழகத்தில் விவசாயிகள் யாரும் பயிர்கள் கருகியதன் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளவில்லை என, பார்லிமென்டில் பேசியுள்ளனர் .பயிர் கருதி சேதம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தின் கதி என்ன? என் வேண்டுகோளை ஏற்று, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பர் என்று நம்புகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., போராடும்:
திருவைகுண்டம் அருகே, பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த பரிதாபத்திற்குரிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில், ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால், டிச., 26 புதன் கிழமை தி.மு.க., போராட்டம் நடத்தும் என கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்கொலை எனபது ஒரு கோழைத்தனம் ... யார் செய்தலும் அது தவறு,. வாழ்வதற்கு எல்லா வசதியும் இப்போது உள்ளது , பல வருடமாக அதில் (நிலத்தில்) சம்பாதித்தோமே ???? ஒரு வருடம் இயற்கை பொய்த்ததால் ஏன் மாழ வேண்டும், சிந்திபோமாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். எந்த அரசு வந்தாலும் இந்த நிலை தொடரும், வீண் அரசியல் செய்ய வேண்டாம்...........
சூப்பராக கற்பனை செய்கிறார் கருணா. இனி நூறு வயது ஆன ஒரு விவசாயி யாராவது இயற்கையாக மரணமடைந்தால் கூட அவர்கள் வீட்டிற்க்கு இவரது கட்சி குண்டர்களை அனுப்பி அவர்கள் வீட்டு காரர்களை தள்ளிவிட்டு இவர்களே காரியங்களை பார்ப்பது போல ஒரு ஐந்து நிமிடங்கள் ஓடும் வீடியோ படம் வேறு வேறு ஆங்கிளில் எடுத்து கொண்டு அதை இவரது குடும்ப தொலைகாட்சியில் ஒலிபரப்புவார்."" ஒரே நாளில் ஒரே இடத்தில பல விவசாயிகள் மரணம். இந்த ஆளும் கட்சி என்னத்தை செய்கிறது."" என்று விவசாயிகளின் மரணத்தை வைத்து பிழைப்பு நடத்துவார் பிணத்தின் மீது உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவர். இனி டெல்டா மாவட்டங்களில் யார் இறக்கிறார்களோ என்று கணக்கெடுக்க இவரது கட்சி அடிபொடிகளை பணிப்பார். வேலை என்று பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. இதை வைத்தாவது சில காலம் பத்திரிக்கைகளில் செய்திகளில் வரலாமே, அரசியல் செய்தது போலவும் இருக்கும். ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது போலவும் இருக்கும். அதே சமயம் இறந்த விவசாயிக்கு ஏதாவது நிலம் இருந்தால் அதை பிடுங்குவதற்கு நோட்டம் பார்த்தது போலவும் இருக்கும். ஒரே கல்லில் பல மாங்காய். யார் கண்டது. செய்தாலும் செய்வார் கருணா. அவரின் அரசியல் HISTORY அப்படி.
இவ்வளவுக்கும் இந்த ஆள்தான் காரணம். இவரின் சுயநலம் தான் இன்றைய நமது இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். நமது இன பற்று மற்றும் மொழி பற்றை காசாக்கிய வியாபாரி இந்த மனிதர். ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் மற்றும் பல சிறு அணைகள் கட்ட இவர் கொடுத்த அனுமதி இன்றைய நமது டெல்டா விவசாயிகளின் வாழ்வுக்கு உலை வைத்தது. கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்து நமது மீனவர்களின் வாழ்வுக்கு வேட்டு வைத்தார். இந்த ஆள் எப்ப எல்லாம் காங்கிரஸ் கட்சியிடம் கூட்டு வைகின்றாரோ அப்ப எல்லாம் நமது இனத்தின் வாழ்வுக்கு உலை வைக்க படுகிறது, இந்த முறை இலங்கை தமிழர்களின் வாழ்வு முள்ளி வாய்காலில் முடிய இவர் தான் காரணம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.