ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு நூலகத்தை வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டும் சொந்த இடமில்லாததால் கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் தெற்கு ரத வீதி ஜங்ஷன் அருகே வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராகவும், 40 பேர் புரவலராகவும் இருந்து வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்டோர் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நூலகத்திலிருந்து மாதந்தோறும் 2 ஆயிரம் பேர் புத்தகங்களை எடுத்து தங்கள் வீடுகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இயங்கும் கட்டடம் மிக குறுகிய இடமாக இருப்பதால் புத்தகங்களை வைப்பதற்கும்,பெண்கள் வந்து செல்வதற்கும் இடமில்லாத நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக நூலகத்துறை சார்பில் சொந்த இடத்துக்காக போராடி வருகின்றனர். இது குறித்து ஸ்ரீவி.,தொகுதி எம்.எல்.ஏ., பொன்னுபாண்டியனும் சட்டசபையில் இது குறித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் நூலகத்துறை சார்பில் கிளை நூலகங்கள் வருவாய் கோட்ட நூலகங்களாக தரம் உயர்த்தியுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நூலகமும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள், ஆண்கள், சிறுவர் பகுதி, ஐ.ஏ.எஸ். டி.என்.பி.எஸ்.சி. போன்ற வேலை வாய்ப்பு புத்தக பகுதி, மீட்டிங் அறை போன்றவைகளுடன் 1.40 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டடப்படவுள்ளது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள 2 ஆயிரம் சதுர மீட்டர் இடம் வேண்டும். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு நூலகத்திற்கு சொந்த இடம் இல்லாமல் உள்ளது. நூலகத்துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் 2ஆயிரம் சதுர மீட்டர் காலியிடம் கேட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் வளரும் தலைமுறையினரின் நலன் காக்கும் வகையில் நகரில் காலியாகவுள்ள இடத்தை நூலகத்தை வழங்க வேண்டுமென வாசகர்கள் விரும்புகின்றனர்.
நூலகர் ராமகிருஷ்ணன், ""புதிய கட்டடத்திற்காக நிலம் கேட்டு ஸ்ரீவி., நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இடம் கிடைத்தால் உடன் கட்டட பணிகள் துவங்கும்,'' என்றார்.
நகராட்சி கவுன்சிலர் முனியப்பன்,"" தமிழக அரசு தரம் உயர்த்திய நூலகத்திற்கு இடம் ஒதுக்க நகராட்சி அதிகாரிகளிடம் இடம் ஒதுக்க கவுன்சில் கூட்டத்தில் கூறியுள்ளேன்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.