திருப்பூர் : திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகள் மிதமான வேகத்தில் நடக்கின்றன.
திருப்பூர்
குமார் நகரில், கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான கட்டடத்தில்,
மாதம் 26 ஆயிரம் வாடகைக்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்
செயல்படுகிறது. தினமும் 300 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
லைசன்ஸ் பெற, முகவரி மாற்றம் செய்ய, வண்டிக்கு "பேன்ஸி' நம்பர் பெற,
நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்,
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் 3 பேர், 45 அலுவலக பணியாளர்கள் உள்ளனர்.
அதனால், எந்தவொரு விண்ணப்பமும், ஆமை வேகத்திலேயே நகர்கிறது. சில பணிகளை
செய்து கொடுக்க தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பதாரர்கள்,
புரோக்கர்களை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
வட்டார போக்குவரத்து துறை
அலுவலர்கள் கூறுகையில், "மேற்பார்வையாளர், கிளார்க், அலுவலக உதவியாளர் என
25 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பத்தை ஒரு அலுவலகத்தில் இருந்து
மற்றொரு இடத்துக்கு எடுத்து வருவது; போட்டோ எடுப்பது; பணம் செலுத்த
வருபவர்களுக்கு, லைசென்ஸ் ரசீது வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தாமதம்
ஏற்படுகிறது. மொத்தம் 60 பணியாளர்களாவது இருந்தால் மட்டுமே நிலைமையை
சமாளிக்க முடியும்,' என்றனர்.
புகார் பெட்டி வைக்கப்படுமா?
"பொதுமக்கள்
நேரடியாக எங்களை சந்திக்கலாம்; லைசென்ஸ் பெற தாமதம் ஏற்பட்டால், புகார்
தெரிவிக்கலாம்; புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்,' என வட்டார
போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடவடிக்கை எதுவும்
எடுப்பதில்லை. புரோக்கர்கள் நடமாட்டம் தொடர்கிறது.
அதனால், பொதுமக்கள்,
தங்களது குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை
அலுவலக கூட்டம் நடக்கும்போது, பிரச்னைகள் தொடர்பாக, வட்டார போக்குவரத்து
அதிகாரி விசாரித்து தீர்வு காண வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.