பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:""ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, கட்டணங்கள் உயர்த்தப்படாததால், தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்திய ரயில்வேயை காப்பாற்ற, கட்டண உயர்வு, தவிர்க்க முடியாததாகி விட்டது. வரும், ரயில்வே பட்ஜெட்டில், கி.மீ.,க்கு, 5 முதல், 10 காசு வரை பயணிகள் கட்டணங்கள் உயர்த்தப்படும்,'' என, ரயில்வே இணையமைச்சர், சூரியபிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். இதனால், 100 கி.மீ., தூரத்திற்கு, ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கும்.

நாட்டில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் துறையாக, ரயில்வே துறை விளங்குகிறது. மத்தியில் கூட்டணி ஆட்சி முறை ஏற்பட்டது முதல், ரயில்வே துறை, கூட்டணி கட்சிகள் வசம் சென்றது. இதனால், 16 ஆண்டுகளாக, அந்த துறை, காங்கிரஸ் கட்சி வசம் வரவேயில்லை.சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்திற்கு பின், ரயில்வே துறை, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. ரயில்வே அமைச்சராக, பவன்குமார் பன்சாலும், அந்த துறை இணையமைச்சர்களாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சூர்யபிரகாஷ்

ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளனர்.ரயில்வே துறை, காங்கிரஸ் வசம் சென்றதில் இருந்தே, கட்டண உயர்வு பற்றி, அத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். "கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், ரயில்வே துறையை, செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்' என, கூறி வருகின்றனர்.

இணையமைச்சர், சூரியபிரகாஷ் ரெட்டி கூறியுள்ளதாவது:ஏராளமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. பணமில்லாததால், அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ரயில் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும், புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் உள்ளோம். இதற்குஏராளமாக நிதி தேவைப்படுகிறது.புதிய பாதை அமைப்பது, இரட்டை பாதையாக மேம்படுத்துவது என, 347 திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; இதற்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் தேவை. எங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் பயணிகள், கட்டணங்களை கூடுதலாக கொடுக்கவும் தயாராக வேண்டும்.பயணிகள் கட்டணம் சம்பந்தப்பட்ட

Advertisement

விதத்தில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. 1 கி.மீ.,க்கு, குறைந்த பட்சம், 5 காசு முதல், அதிகபட்சம், 10 காசு வரை கட்டண உயர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, 2013 - 2014 பட்ஜெட்டில் வெளியிடப்படும்.இவ்வாறு, அமைச்சர் சூரியபிரகாஷ் ரெட்டி கூறினார். பட்ஜெட்டில் கட்டணம் உயர்த்தப்படலாம் என, அமைச்சர் கூறினாலும், அதற்கு முன்னதாகவே உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மற்றொரு இணையமைச்சரான, அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும் போது, ""ரயில்வே நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. கட்டணங்களை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம்ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சால் கூறுகையில், ""கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. எவ்வளவு உயர்த்தப்பட வேண்டும், எந்தெந்த இனங்களுக்கு கட்டண உயர்வில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பன போன்றவற்றை, ரயில்வே கட்டண ஆணையம் ஆலோசித்து வருகிறது,'' என்றார்.

கடந்த, 2012 - 13ம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டின் போது, அமைச்சராக இருந்த, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தினேஷ் திரிவேதி, ரயில்வே கட்டணங்களை, 15 சதவீத அளவுக்கு உயர்த்தினார். அதற்கு, கட்சித் தலைவர், மம்தா கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
25-டிச-201210:28:34 IST Report Abuse
mrsethuraman  ரயிலில் விற்கப்படும் டிபன் சாப்பாடு எல்லாம் கொள்ளை விலை.தரமும் அளவும் மோசம்.இதற்கு ஒரு வழி பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel
சாதனா - சென்னை,இந்தியா
24-டிச-201209:24:17 IST Report Abuse
சாதனா என் நண்பர் ஒருவர் வடஇந்திய ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்து, இப்போது அங்கிருந்து மாற்றலாகி தென் இந்திய ரெயில்வேக்கு வந்து விட்டார். அவர் சொல்கிறார், வட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் டிக்கெட்டே எடுப்பதில்லை. அவரவர்கள் இஷ்டத்துக்கு எந்த வகுப்பில் வேண்டுமானாலும் ஏறி படுத்துக்கொள்வார்கள். ரெயிலே அவர்களுக்கு சொந்தம் என்பது போல் நடந்து கொள்வார்கள். எங்களாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே தான் நான் அங்கிருந்து மாற்றலாகி தென்இந்திய ரெயில்வேக்கு வந்து விட்டேன், என்றார். முதலில் வட இந்தியர்களை டிக்கெட் எடுக்க வையுங்கள். ரெயில்வே க்கு லாபம் தன்னால வரும்.
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
24-டிச-201208:53:03 IST Report Abuse
PR Makudeswaran ரயில்வே துறை கட்டணங்கள் உயர்த்தப்படட்டும். ஊழலை அத்துறையில் உள்ள ஊழலை களைந்தாலே பாதி நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்புண்டு. தென்னாட்டில் திருட்டு ரயில் பயணம் குறைவு. வடநாட்டிலோ அதுவும் பீகார் போன்ற பகுதியில் டிக்கெட் பரிசோதகர் ஒரு வாயில்லா பூச்சி. ரயில்வே காவல் அங்கு கையாலாகாத ஒன்று.நியாயமான வருமானத்தை அப்பகுதியில் இழக்கிறது. .அதை தடுத்தாலும் வருமானம் உயரும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-டிச-201208:50:59 IST Report Abuse
g.s,rajan ரயில்வேத் துறை பல முறை மறைமுகமாக கட்டணத்தை தட்கல் முறையில் ஏற்றி உள்ளது .போதுமான ரயில்களும் விடப்பபடுவதில்லை .அரசாங்கமே ப்ளாக்கில் டிக்கெட் ஐ விற்கிறதா ?மேலும் மற்ற கட்டணங்களும் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்றப்பட்டு விட்டன .பல ரயில்கள் அதி விரைவு ,விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது .ஆனால் கால தாமதங்கள் தொடர்கதையாகி விட்டது .குறித்த போதிய ரயில் பாதைகள் ,பிளாட்பாரங்கள் பல இடத்தில இல்லாததால் தேவையற்ற((crossings)நிறுத்தங்களும் பல சமயங்களில் பயணிகளின் பொறுமையை கடுமையாக சோதித்து வருகிறது .சிலர் குறிப்பிட்ட ரயிலை தவறவும் செய்கின்றனர் .சரக்கு ரயில்களுக்கு தனியாக பாதையை கட்டாயம் அமைக்க வேண்டும் .பயணிகள் பாதையில் சரக்கு ரயில்களை கண்டிப்பாக விடக்கூடாது .கால தாமதம் ஏற்பட்டால் சேவைக்குறைபாடாக கருதி அபராதமும் விதிக்க வேண்டும் ,அந்த கட்டணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் .நம்மை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற எண்ணம் ரயில்வேதுறைக்கு வளர்ந்துவிட்டது அதை முதலில் மாற்ற வேண்டும் பயணிகள் கட்டணம் எவ்வளவு ஏற்றினாலும் பரவாயில்லை ஆனால் பயணிகளுக்கு எல்லா விதத்திலும் வசதிகள் செய்து தர வேண்டும் .ஆனால் ரயில்வேயினால் அதை நிச்சயம் செய்ய முடியாது.மோசமான தரமற்ற சிற்றுண்டிகள் ,காபி,தேநீர் ,சாப்பாடு ,தரமற்ற படுக்கை மற்றும் இருக்கை,பாடாவதி ஹைதர் அலி காலத்து கோச்சுகள் இவை எல்லாம் மாற வேண்டும் .பல ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்களை நவீன படுத்த வேண்டும் .பல மாடிப்படிகளை கடந்து மேலே ஏறித் தடுமாறுகின்றனர் .குடிநீரைக்கூட பயணிகள் அதிக விலை கொடுத்துதான் வாங்கி குடிக்கும்அவலம் ஏற்பட்டு வருவது தொடர்கிறது .இந்த நிலை எப்போது மாறும் ? ஜி.எஸ்..ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
24-டிச-201208:43:33 IST Report Abuse
Peria Samy இரண்டாம் வகுப்பு ரயில்கட்டன உயர்வு கி.மீ.க்கு பத்து பைசா என்பது அதிகமானது. ஏழைகளின் சிரமத்தைக் கணக்கில்கொண்டு இதை மறுபரிசீலனை செய்யவேண்டும்,அல்லது குறைவாக உயர்த்தலாம்.கூட்டணிக்கட்சிகளின் கையில் ரயில்வேத்துறை இருந்தவரை கட்டண உயர்வு இல்லை.காங்கிரசிடம் ரயில்வே வந்தவுடன் கட்டணம் உயரப்போகிறது.அரசுப்பணம் எத்தனை வி.ஐ.பி.க்களுக்கு வெளிநாட்டுப்பயணம் என்றபெயரில் வாரி இறைக்கப்படுகிறது,வசதியுள்ள பல தலைவர்களின் மருத்துவச் செலவுக்காக எத்தனை லட்சங்கள் அரசு கருவூலத்திலிருந்து திருப்பிவிடப்படுகிறது,இதையெல்லாம் கட்டுப்படுத்தி மக்களைப் பாதிக்கும் கடுமையான முடிவுகளைத தவிர்க்கமுடியாதா?சாமான்ய மக்களைப் பாதிக்கும் காங்கிரசின் செயல்பாடு தொடருமானால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதற்கான விலையைத் தரவேண்டி இருக்கும்.ஆரம்பத்தில் மக்கள் குய்யோ முறையோ என்று கூக்குரல் போடுவார்கள்,பின்னால் அதைமறந்துவிடுவார்கள் என்று நினைக்கவேண்டாம். சிந்திக்கட்டும்.காங்கிரஸ்காரர்கள். .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
24-டிச-201206:23:08 IST Report Abuse
ஆரூர் ரங முதலில் வடமாநிலத்தவரையும், கட்சி மாநாடுகளுக்குப் போகும் தொண்டர்களையும் கட்டாயம் டிக்கெட் வாங்க வையுங்க. நஷ்டமே வராது. அவங்களுக்கு டிக்கெட் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாது போலிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
24-டிச-201206:12:07 IST Report Abuse
S.Govindarajan. ஒன்பதாண்டுகளாக கட்டணத்தை உயர்த்தவில்லை. 1000 கோடி லாபம் என்று லல்லு பீத்தினாரே. அது பொய்யா ? சரக்கு அனுப்புவதில் லாபம் என்றாரே. அதுவும் பொய்யா? அப்போது லாபம் வந்தது உண்மையானால், அதன் பின்னர் நஷ்டம் வந்தது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
24-டிச-201205:10:40 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN I request to the Prime minister of India, Railway Minister, Sonia Gandhi and concerned authorities to first improve the facilities for the travelling public. Run better and good coaches. Cut the unwanted expenses. Cut the pension. Put another two to three lines . Speed up the trains.
Rate this:
Share this comment
Ramani Ramasubbu - trichy,இந்தியா
24-டிச-201208:41:57 IST Report Abuse
Ramani RamasubbuThe travelling public do not exactly know how much Railways sp for their safe and comfor journey for whatever economic rates they pay to Railways for the journey. They unfortunately do not their mouth when they travel in any any private operators vehicle or public transport buses even if they have cough up exorbitant amount for back-breaking travel. Do these travelling public act responsibly when they travel in train without throwing the garbage into the track or inside the coaches ? Or soft touch the computer based train info kiosks ? Before they advise Railway Minister or the Authorities, let them try to stick to the decent norms expected of the travelling Public. - Ramani...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.