கள்ளிக்குடி:""டில்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு, துத்துக்குடியில் 13 வயது பள்ளி மாணவி பலாத்காரம் என.. காட்டுமிராண்டித்தனங்களுக்கு, மதுவே காரணம். தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, நெல்லை உவரியில் கடந்த 12ந்தேதி நடைப்பயண பிரசாரம் துவக்கிய வைகோ, நேற்று, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வந்தார்.அவர் கூறியதாவது: மதுவின் கொடுமையை அகற்றுவதே இப்பயணத்தின் நோக்கம். எட்டு ஆண்டுகளுக்கு முன், நடைப்பயணம் செய்யும் போது, மதுவின் தீமையை அறிந்தேன். மாணவர்கள் மதுவிற்கு அடிமையாவது விளைநிலங்களை தீயிட்டு கொளுத்துவதற்குச் சமம்.
நகர்புறங்களில் கைநிறைய சம்பாதிக்கும் பெண்கள், கேளிக்கை விடுதிகளில், மது அருந்த தொடங்கி விட்டனர். இது சமுதாயச் சாபக்கேடு. டில்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு, துத்துக்குடியில் 13வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு, மதுவே மூல காரணம். நான் செல்லும் வழிகளில், பெண்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். மதுவிற்கு எதிராக மவுனப்புரட்சியை தொடங்கி விட்டனர். பூரண மதுவிலக்கே எங்கள் இலக்கு, என்றார்.முன்னதாக விருதுநகரில் அவர் பேசியதாவது: என்னை தேர்தலில் தோற்கடித்தது நல்லது. நாட்டிற்கு நல்லது செய்யவும், மக்கள் பணி செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நச்சு வாயு நிறுவனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, பூரண மது விலக்கு பிரசாரம் என தொடர்கிறேன். மது போதையால் ரோமபுரி சாம்ராஜ்யம் அழிந்தது. உறுதியுடன் வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன், என அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.