திருவாரூர்:
வால்மார்ட் நிறுவனம், தொழில் துவங்கிய பின், அமெரிக்காவில்
வேலையின்மையும், வறுமையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இதை எப்படி பிரதமர் அனுமதிக்கலாம் என மா.கம்யூ.,
கேள்வி எழுப்பியுள்ளது.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டின் ஆபத்தை
விளக்கி, திருவாரூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், மா.கம்யூ.,
எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: சில்லரை வர்த்தகத்தில்
அன்னிய முதலீடு என்ற மத்திய அரசின் மோசமான நிலையால், அப்பாவி மக்கள்
பாதிக்கும் அபாயம் உள்ளது.
எந்தத் துறையிலும் இல்லாத வருவாய், சில்லரை
வணிகத்தில் இருப்பதால், மன்மோகன் சிங், இந்திய மக்களை வெள்ளையனிடம் விற்க
பேரம் பேசிவிட்டார்.வால்மார்ட் நிறுவனம் தொழில் துவங்கிய பின்,
அமெரிக்காவில் வேலையின்மையும், வறுமையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்க
செனட், அறிக்கை சமிர்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதை
அனுமதிக்கலாமா? அவ்வாறு அனுமதித்தால் நிலை என்னாகும் என பிரதமர்
யோசிக்காதது ஏன் என தெரியவில்லை.கருணாநிதி, 15 நிமிடத்திற்கு ஒரு முறை
மாற்றிப் பேசும் பண்பாடு மிகுந்தவர்; அவரை நம்ப முடியாது. அறிக்கைகளை
தயாரித்து வைத்து, காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றும்
வெளியிடுகிறார்.முதலில், "ஆதரிக்க மாட்டேன்' என்றார். பின், "மதவாத
சக்திகள் ஆட்சி கட்டிலில் வந்து விடக்கூடாது என்பதற்கு ஆதரிக்கிறேன்'
என்கிறார். உலகளவில், சீனாவிற்கு அடுத்ததாக, மக்கள் தொகை உள்ள நாடு
இந்தியா. அதனால், மக்களின் உழைப்பை சுரண்டி விற்க துடிக்கும் கட்சிகளுக்கு,
வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, பாடம் புகட்ட
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.