மத்திய
நிதி அமைச்சர் சிதம்பரம் குறித்த, நூல் வெளியீட்டு விழா, இம்மாதம், 29ம்
தேதி, சென்னையில் நடக்கிறது. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன்,
சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கைகோர்ப்பதால், இரு
கட்சிகளிடையே, உறவு வலுப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது."டெசோ' மாநாடுக்கு
பின், தி.மு.க., - காங்கிரஸ் உறவில், சிறிய விரிசல் ஏற்பட்டிருந்தது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில், தி.மு.க., சார்பில் புதிய அமைச்சர்கள் இடம்
பெறவில்லை.காங்கிரஸ் மேலிடம் மீது, தி.மு.க., தலைமை அதிருப்தியுடன்
இருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அடிக்கடி மத்திய அமைச்சர்கள்
கருணாநிதியை சந்தித்த போதும், மத்திய அமைச்சர் வயலார் ரவி, நேற்று
சந்தித்து பேசியது அதிக நட்புறவுக்கு வழிகாட்டும் என்ற கருத்து
உள்ளது.
அதேசமயம், சிதம்பரத்திற்கும், கருணாநிதிக்கும் இடையேயான நட்புறவில்,
விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல், இரு கட்சி வட்டாரங்களிலும் தொடர்ந்து
நீடித்து வருகிறது.தி.மு.க., - காங்கிரஸ் இடையே ஏற்பட்டிருந்த, விரிசலை
ஒட்ட வைக்கும் வகையிலும், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., -
காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும், "சிதம்பரம் கலை இலக்கிய
பேரவை' சார்பில், "சிதம்பரம் ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா,
இம்மாதம், 29ம் தேதி நடக்கிறது.விழாவில், கருணாநிதி தலைமை வகித்து, நூலின்
முதல் பிரதியை வெளியிட, அதை சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி பெற்றுக்
கொள்கிறார். பொதுநிகழ்ச்சியில், சிதம்பரத்தின் தாயார் பங்கேற்கும் முதல்
விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன்
பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, கருணாநிதியுடன் ஒரே மேடையில் பங்கேற்று
வாழ்த்தி பேசுகிறார். சிறப்பு விருந்தினராக, மத்திய அமைச்சர் சிதம்பரம்
பங்கேற்கிறார்.இந்த விழா குறித்து, காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
கருணாநிதி,
சிதம்பரத்திற்கு இடையே திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி
பரவியிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், லோக்சபா
தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதை உறுதிப் படுத்தும்
வகையிலும், இந்நூல் வெளியீட்டு விழா நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திமுக (20 சீட்டுகள்?) + காங்கிரஸ் (10 சீட்டுகள்?) + தேதிமுக (10 சீட்டுகள்?) ஓர் அணி , மறு பக்கம் அதிமுக (30 சீட்டுகள்?) + பா.ஜ.க (5 சீட்டுகள்?) + ?? (5 சீட்டுகள்?) ஓர் அணி என்று உருவாகி வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் (பா.ஜ.கவில் மோடி, ஜெட்லி, சுஷ்மா, காங்கிரசில் ராகுல், சிதம்பரம், ஷிண்டே...), கடந்த ஒன்றரை ஆண்டில் அதிமுக ஆட்சி குறித்து மக்கள் திருப்தி, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகள்தான் வரும் தேர்தல் முடிவை தீர்மானிக்கும். போட்டி கடுமையாக இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.