சென்னை:""அரபு
நாடுகளில் முறையான ஆவணங்களின்றி முறைகேடாக வசிக்கும், 40 ஆயிரம்
இந்தியர்கள், நாடு திரும்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என,
மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர்
நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது:தனது குழந்தையை கண்டித்த இந்திய
பெற்றோருக்கு நார்வே நாட்டில் சிறை தண்டனை வழங்கியிருப்பது ஏற்றுக் கொள்ள
முடியாதது.
பெற்றோர் சிறையில் இருந்தால், அந்த குழந்தையின் எதிர்காலம்
என்னவாகும் என்று, தண்டனை வழங்கியவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
சிறையில் உள்ள பெற்றோருக்குத் தேவையான சட்ட உதவிகளை, மத்திய அரசு செய்து
வருகிறது.டில்லியில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு
முழுவதும், பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச
தண்டனை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. என்னுடைய தனிப்பட்ட
கருத்தும் அது தான்.நாட்டின், 11 மாநிலங்களை சேர்ந்த, 40 ஆயிரம் பேர், அரபு
நாடுகளில், உரிய ஆவணங்களின்றி முறைகேடாக தங்கியுள்ளனர். அவர்கள் நாடு
திரும்ப, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு,
வயலார் ரவி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.