"எலிகளை பற்றி இனி என்ன பேச்சு'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:""பாடுபட்டது ஓரிடம்; பரிசு பெற்றது இன்னொரு இடம்'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் மதுரையில் பேசினார்.அ.தி.மு.க., சார்பில் மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இதுவரை, ஒரு கூட்டத்தை ஆதரித்துப் பேசிய நான், தற்போது
தோட்டத்தை ஆதரித்து பேசுகிறேன். பாறையில் விதையாக இருந்த நான், அ.தி.மு.க., என்ற நன்செய் நிலத்தில் விழுந்திருக்கிறேன்.

புலிவேட்டைக்குப் புறப்பட்டுள்ள நான், எலிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை. பாடுபட்டது ஓரிடம்; பரிசு பெற்றது இன்னொரு இடம். எனக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலர் மற்றும் காரும், சீரும் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.மின்வெட்டை சரி செய்ய, தி.மு.க., தலைவர் கருணாநிதி செயற்குழுவை கூட்டி என்ன செய்யப்போகிறார்? அவரது, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் வெறும், 206 மெகா வாட் தான், மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.மத்திய தொகுப்பில், 1200 மெகா வாட் மின்சாரம் உபரியாக உள்ளது. அதை தமிழகத்திற்கு வழங்குமாறு, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கருணாநிதி கேட்டதுண்டா? கேரளாவில் உம்மன்சாண்டி- அச்சுதானந்தன் இடையே தீரா பகை உண்டு. ஆனால், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் ஒற்றுமையாக உள்ளனர். இங்கு
கருணாநிதி ஒற்றுமையாக நின்றதுண்டா? சுய நலத்திற்காக, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அவர் ஆதரித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CGS Kumar - Chennai,இந்தியா
24-டிச-201206:10:48 IST Report Abuse
CGS Kumar வைகோ கட்சி கலைத்து விட்டு, மக்கள் இயக்கமாக மாறி விடுவது நல்லது. வைகோ நல்ல மனிதர். ஆனால் அரசியல் என்பது வேறு.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
24-டிச-201205:35:54 IST Report Abuse
Aboobacker Siddeeq ஆஹா.... வாங்கிய பரிசுக்கும் அதிகமாக பேசிவிட்டாரே.... பொறுங்கள் விரைவில் அடுத்த பெரிய பரிசு தோட்டத்தில் இருந்து விளைந்து உரிய பங்கு வந்து சேரும்...
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
24-டிச-201201:28:36 IST Report Abuse
maravan இந்த 5 ஆண்டுகளுக்கு தான் எலி புலியாகவும், புலி எலியாகவும் மாறும்..பாவம் நம் மக்கள். விட்டு விடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்