மதுரை:"மின்வெட்டை
கண்டித்து, சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும், ஜன.,9 ல், கடை
அடைக்கப்படும்,' என, தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக்குழு கூட்டம்
அறிவித்தது.
மதுரையில், இதன் தலைவர் பாலசுந்தரம் கூறியதாவது: டிச., 8
ல் கோவையில், 140 சங்கங்களின் ஒப்புதல் பெற்று, இக்கூட்டுக்குழு
தொடங்கப்பட்டது. சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்,
இதில் உள்ளனர். 14 மணி நேரம் மின்வெட்டால், தொழில் தொடர முடியவில்லை.
மின்சாரத்தை சமமாக பகிர்ந்தளித்து, தமிழகம் முழுதும் பொதுவான மின்வெட்டு
அமல்படுத்த வலியுறுத்தி, முதல்வர் ஜெ., அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு மனு
அனுப்பினோம்; இதுவரை பதில் வரவில்லை.
மின் நுகர்வோர் படும் சிரமங்களை,
அரசிற்கு எடுத்துரைக்கும் விதமாக, ஜன.,9 ல் கடையடைப்பு போராட்டம்
நடத்தப்படும். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை, ஓட்டல், வணிக
நிறுவனம், தியேட்டர், தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கும். டிச.,28 முதல்
31 வரை, தமிழக அரசு, மின்வாரியம், சென்னை ஐகோர்ட்டிற்கு, தந்தி, பேக்ஸ்,
மெயில் அனுப்ப உள்ளோம். மாவட்டம் வாரியாக சங்கத்தினர் கூடி, கலெக்டரிடம்
நிலைமையை விளக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார். "மடீட்சியா' தலைவர்
மணிமாறன், "கொடீட்சியா' முன்னாள் தலைவர் கந்தசாமி உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.