பழநி:ஐயப்ப
பக்தர்கள்வருகையால், பழநிகோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.பழநி மலைகோயில்
சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்ப சீசன்
மற்றும் மார்கழி பூஜையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான
பக்தர்கள் பழநிக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை
தரிசித்து
செல்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம்
அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரோப்கார், "வின்ச்' ல் மலைகோயிலுக்கு
செல்ல பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்குள் நிலை உள்ளது. பஸ், வேன்,
கார் போன்ற வாகனங்கள் அதிகஎண்ணிக்கையில் வருவதால் பூங்காரோடு,
அய்யம்புள்ளிரோடு, அருட்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு, கொடைக்கானல்
ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளத. கிரிவிதியில் கார், பஸ்,
வேன்கள் செல்ல அனுமதித்ததால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஐயப்ப சீசன் முடியும் வரை இந்தநிலை தொடரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.