Advertisement
அன்பழகன் மனைவி மரணம் : கருணாநிதி நேரில் அஞ்சலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,00:34 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 24,2012,02:37 IST

சென்னை:தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகனின் மனைவி சாந்தகுமாரி, சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் மனைவி, டாக்டர் சாந்தகுமாரி, 78. இவர், சில நாட்களாக, உடல் நலம் குன்றி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, 9:30 மணிக்கு மரணம் அடைந்தார்.அவரது உடல், அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, நாராயணசாமி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, ராஜாத்தி, கனிமொழி, ஜெ.அன்பழகன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அரும்பாக்கம் மயானத்தில், சாந்தகுமாரியின் உடல், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.இம்மாதம், 19ம் தேதி, அன்பழகனுக்கு 91வது பிறந்த தினமாகும். அப்போது, சாந்தகுமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தன் மனைவி உடல் நலம் குன்றியிருக்கும் நேரத்தில், பிறந்த தின விழாவை கொண்டாட விருப்பமில்லை என, அன்பழகன் தெரிவித்தார்.ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதியின், வற்புறுத்தலின் காரணமாக, பிறந்த தினத்தை அன்பழகன் கொண்டாடினார். அவரது பிறந்த நாள் முடிந்து, மூன்று நாட்கள் கழிந்துள்ள நிலையில், மனைவி இறந்தது, அன்பழகனின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-டிச-201206:06:51 IST Report Abuse
villupuram jeevithan கடந்த எட்டு மாதங்களாக தன் மனைவி உயிருக்கு போராடி கொண்டியிருக்கும்போது, யார் வற்புறுத்தினாலும் தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கக் கூடாது இவர். பாவம், ஆத்மா சாந்தியடையட்டும்.
Rate this:
0 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.