சிவகங்கை:சிவகங்கையில்,
கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள், பள்ளி மாணவியரை, "சில்மிஷம்' செய்வது
தொடர்வதால், மாணவியரின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து,
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, "கவுன்சிலிங்' நடத்த அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே, அனுமந்தங்குடி பள்ளியில்
பணிபுரியும், உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம், விவசாய ஆசிரியர் சீனிராஜ்,
மறவமங்கலம், அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் விசுவநாதன், ஆரோக்கிய
பரிபூரணம், திருப்புவனம், கீழடி பள்ளி மாணவியை முத்தமிட்ட, உடற்கல்வி
ஆசிரியர் சுரேஷ்குமார் என, சில்மிஷத்தில் ஈடுபட்ட, ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவிர, மேலும் பல பள்ளிகளில் சில்மிஷ
ஆசிரியர்களின் சேட்டையால், ஒட்டுமொத்த ஆசிரியர்களும், அவமதிப்புக்கு
ஆளாகியுள்ளனர். இதனால், சில்மிஷ ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை விதிக்க
வேண்டும் என்பது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து,
உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் கூறுகையில், ""மாவட்டத்தில், உடற்கல்வி
ஆசிரியர்களால், தொடர்ந்து பிரச்னை எழுவதைத் தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர், ஆலோசனை வழங்க உள்ளார். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மனநல
நிபுணர்கள் மூலம், "கவுன்சிலிங்' தர உள்ளோம். தவறு செய்த ஆசிரியர்கள் மீது,
துறை நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்றார்.ஆசிரியர் பயிற்சி நிறுவன,
உளவியல் துறை பேராசிரியர் ராமராஜ் கூறியதாவது:மற்ற பாட ஆசிரியர்களை விட,
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நேரம் குறைவு; விளையாட்டு என்ற பெயரில்
மாணவியரை வெளியில் அழைத்துச் சென்று, இது போன்ற கீழ்த்தரமான செயலில்
ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பது
குறித்து, "கவுன்சிலிங்' கட்டாயம் நடத்த வேண்டும்; அனைத்து
ஆசிரியர்களுக்கும், உளவியல் ரீதியான, பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு,
அவர் கூறினார்.பெற்றோர்கள் சிலர் கூறுகையில், "வேலியே பயிரை மேய்வது போல்
உள்ளது. எதிர்கால கனவோடு பள்ளிக்கு செல்லும் மாணவியருக்கு, சில
ஆசிரியர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. இது போன்ற ஆசிரியர்களுக்கு, கடும்
தண்டனை விதிக்க வேண்டும்; அப்போது தான் நல்ல சமுதாயம் உருவாகும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.