சென்னை:அத்தியாவசிய
உணவு பொருட்களான அரிசி, ரவை, மைதா, நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலை
அதிகரித்துள்ளதால், நடுத்தர ஏழை மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கலின் போது மேலும் இவற்றின் விலை உயரும் என்று
கூறப்படுகிறது.தமிழகத்தில், தொடர் மின்தடை மற்றும் வடகிழக்கு பருவ மழை
பொய்த்தது, வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காதது ஆகியவற்றால், அத்தியாவசிய
உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.அரிசி விலை, இரண்டு
வாரத்தில், 25 கிலோ மூட்டை ஒன்றுக்கு, 50 முதல் 100 ரூபாய் வரை
அதிகரித்துள்ளது. அரிசிக்கு அடுத்தபடியாக உணவுக்கு பயன்படுத்தும், கோதுமை
மாவு, ரவா, மைதா வகைகளின் விலையும் கிலோ, ஐந்து ரூபாய்க்கு மேல்
அதிகரித்துள்ளது.அக்மார்க் நல்லெண்ணெய் லிட்டர், 180 ரூபாயில் இருந்து, 200
ரூபாயாகவும், சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் லிட்டர், 124 ரூபாயில்
இருந்து, 128 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.அதே சமயம் சர்க்கரை, பருப்பு விலை
சிறிது குறைந்திருக்கிறது.
வகைகள் முந்தைய விலை புதிய விலை (ரூபாயில்)
(ஏ.டி.பி., அரிசி (25 கி., மூட்டை) 750 800)
(பாபட்லா ('') 850 900)
(பாபட்லா, பழைய அரிசி ('') 950 1,000)
(வெள்ளைப் பொன்னி 1,000 1,100)
(இட்லி அரிசி (75 கி., மூட்டை) 1,200 1,360)
(பொன்னி பச்சரிசி (50 கி., மூட்டை) 1,950 2,050)
(பொங்கல் பச்சரிசி ('') 1,200 1,300)
(ரவை (1 கி.,) 35 40)
(மைதா (1 கி.,) 30 36)
(கோதுமை (1 கி.,) 25 30)
(பாமாயில் 56 52)
(சன் பிளவர் 88 84)
(இரண்டாம் ரகம் 84 80)
(தே.எண்ணெய் 120 95)
(இரண்டாம் ரகம் 100 85)
(சாதா நல் எண்., 90 80)
(அக்மார்க் ந.எண் 180 200)
(கடலை எண்ணெய் 105 110)
பல
மாநிலங்களிலும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிப்பாலும்,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரிப்பாலும், எண்ணெய் வகைகளில் விலை
சற்று குறைந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.