ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம்
அருகே, மேட்டுகற்களத்தூர் ஒன்றிய துவக்கப் பள்ளி, ஒரு மாதமாக, மாணவர்கள்
இல்லாமல் செயல்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம்,
ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பள்ளிக்கு, நடப்பாண்டு
துவக்கத்தில், மூன்று, ஐந்தாம் வகுப்பில், தலா ஒரு மாணவி வீதம், இருவர்
மட்டுமே வந்தனர்.இவர்களும் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதால், ஒரு
மாதத்திற்கும் மேலாக, மாணவர்களின்றி இப்பள்ளி செயல்படுகிறது.
தலைமை
ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மட்டும், தினமும்
பள்ளி வந்து செல்கின்றனர்.தலைமை ஆசிரியர் ராசு கூறியதாவது:இந்த ஊரில், 50
குடும்பங்கள் உள்ளன. துவக்கப் பள்ளிக்கு ஏற்ற வயதில், இந்த ஊரில்,
குழந்தைகள் இல்லை. மாணவர் சேர்க்கைக்காக கூட்டம் நடத்தினோம். வெளியூரில்
இருந்து குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக, ஊர் மக்கள் கூறினர். இது
குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர்
கூறினார்.ராமநாதபுரம் மாவட்ட, தொடக்கக் கல்வி அலுவலர், ஈவிலிங் சுகுணா
கூறுகையில்,
""விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.