ராமநாதபுரம்:ராமநாதபுரம்
மாவட்டத்தில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், பல ஆயிரக்கணக்கான டன்
உப்பு குவியலை, பனை ஓலை, தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
இந்த
மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை, தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு, அங்கு சுத்தப்படுத்திய பின், தரம்
பிரித்து, தமிழகம் மட்டுமின்றி, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட
ஆயிரக்கணக்கான டன் உப்பை, குன்றுகளாக குவித்து வைத்துள்ளனர்.
மார்கழியில்,
அதிகாலை 3:00 மணி முதல், காலை 6:00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால்,
உப்பு குவியல்களை தார்பாய், பனை ஓலைகளை கொண்டு, "ஸ்வெட்டர்' பொருத்தியது
போல் மூடி வைத்துள்ளனர்.உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பனிப்பொழிவு
அதிகமாகும் போது, உப்பு கரைந்து விடும். கடலோர பகுதிகளில், காற்றும் பலமாக
வீசி வருவதால், உப்பு சிதறி, வீணாகக்கூடும். இதனால், பாதுகாப்பாக மூடி
வைத்துள்ளோம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பனிப்பொழிவு குறைந்ததும், பனை
ஓலை, தார்பாய்களை அகற்றி விடுவோம் என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.