Advertisement
இளம்பெண்களை பாதிக்கும் "திருமண உதவி திட்டம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,00:36 IST

மதுரை:தமிழகத்தில், 17 மாவட்டங்களில், தனியார் தொழிற்சாலைகளில் செயல்படுத்தப்படும், "திருமண உதவி திட்டத்தால்' இளம்பெண்கள் உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
கிராமப்புறங்களில், சிறுமியர் படிக்க வசதியில்லாத குடும்பங்கள் தான், இத்தொழிற்சாலைகளின் இலக்கு. 14 முதல், 18 வயதுக்குள் இருக்கும் பெண்களை, மூன்றாண்டு கால குத்தகைக்கு, ஒப்பந்தம் செய்கின்றனர்."தொடர்ந்து மூன்றாண்டுகள் வேலை செய்தால், 60 ஆயிரம் ரூபாய், மொத்த சம்பளமாக தருகிறோம்; அதை வைத்து, உங்கள் மகளின் திருமணத்தை நடத்தலாம்' எனக் கூறி, பெற்றோரின் மனதை மாற்றுகின்றனர்.அங்கேயே விடுதியில் தங்கும் பெண்கள், குறைந்தது, 18 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

இதுகுறித்து, மதுரை சோகோ அறக்கட்டளை துணை இயக்குனர், செல்வகோமதி கூறியதாவது:நூறு பெண்களுக்கு, நான்கு கழிப்பறைகள், வசதியில்லாத விடுதிகள் என்றிருந்தன. பயிற்சியாளராக நடத்தப்படுவதால், தொழிலாளருக்குரிய குறைந்தபட்ச ஊதியம், பி.எப்., - இ.எஸ்.ஐ., விடுப்பு சலுகைகள் கிடைப்பதில்லை. இப்பெண்கள், தொழிற்சாலையில் வேலை பார்த்ததற்கான ஆவணங்களும் இருப்பதில்லை.இதை, ஐகோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம். தொழிற்சாலைகள் உண்மையிலேயே வேலை கொடுக்க நினைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை, நிரந்தர தொழிலாளர்கள் ஆக்கலாம். மூன்றாண்டு குத்தகை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இதை தடுக்க, கிராமப்புறங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அரசு இவ்விஷயத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.