E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
போலீஸ் பணியில் சிறுவர்களை அமர்த்தும் அவலம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
00:37

சென்னை:சென்னையின் முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில், நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இப்பணியில் பெரும்பாலும் தனியார் நபர்களை அமர்த்துவதோடு, சிறுவர்களையும் அமர்த்தி முறைகேடாக பணம் வசூல் செய்கின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, அண்ணாசாலை, வணிக வளாகம், ஒயிட்ஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளின் குறிப்பிட்ட பகுதிகளில், வாகனங்கள் நிறுத்துவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், முக்கிய சாலைகளில், நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களின் சக்கரத்தை, லாக் செய்வதோடு, இரு சக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசாரின், கிரேன் வண்டி கொண்டு, அப்புறப் படுத்தி, வேறு இடத்திற்கு எடுத்து செல்கின்றனர். பின், வாகன உரிமையாளர்களிடம், அபராதத் தொகையை, வசூல் செய்கின்றனர். ஆனால், தற்போது, கிரேன் வண்டிகளில், தனியார் நபர்களையும், சிறுவர்களையும் பணிக்கு அமர்த்தி, போலீசார் முறைகேடாக பணம் வசூல் செய்கின்றனர்.
நேற்று மாலை, 4:15 மணிக்கு, கூN23, எ1013 என்ற போக்குவரத்து போலீசாரின் கிரேன் வண்டியில், சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, வேலை வாங்கினர். இந்த நபர்கள், வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக பணம் வசூல், செய்கின்றனர். இதற்கு, சில போக்குவரத்து போலீசாரும் உடந்தை என, புகார் எழுந்துள்ளது.சில, உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டு வேலை செய்வதற்கு, போலீசாரை உபயோகப்படுத்துவதால் தான், போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, தனியார் நபர்களை இதுபோன்ற பணிக்கு அமர்த்த வேண்டிய நிலை, ஏற்படுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் கருணா சாகரிடம் கேட்டபோது, ""இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.