சென்னை:""நல
திட்டங்களின் பயன்களை, மக்களிடம் சேர்ப்பதில், வங்கிகள் தொடர்ந்து
அரசுக்கு உதவ வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள்
விடுத்தார்.
ஐ.ஓ.பி., வங்கியின், "பவள விழா'வை ஒட்டி "ஐ.ஓ.பி., அட்-75'
எனும் நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. ஐ.ஓ.பி., வங்கியின்
தோற்றம், வளர்ச்சி, சாதனைகள் போன்றவற்றை விளக்கும் இந்நூலை, மத்திய நிதி
அமைச்சர் சிதம்பரம் வெளியிட, வங்கியின் நிறுவனர் எம்.சி.டி.எம்.
சிதம்பரத்தின் பேரன் பத்தாச்சி பெற்றுக்
கொண்டார்.விழாவில், சிதம்பரம்
பேசியதாவது:நம் நாட்டில் வங்கிகள், பணம், நகையை வைத்து எடுக்கும் இடமாக
மட்டும் இல்லாமல், சமூக பொருளாதாரத் திட்டங்களை, நிறைவேற்றும்
நிறுவனங்களாகவும் உள்ளன. 24 லட்சம் மாணவர்களுக்கு, 52,000 கோடி ரூபாய்
கல்விக் கடன், வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம்
முதல், மாத ஓய்வு ஊதியம், கல்வி உதவித் தொகை, கர்ப்பிணி பெண்களுக்கான
மருத்துவ உதவித் தொகை போன்றவற்றை, பயனாளிகளுக்கு, அவர்
களின் வங்கிக்
கணக்கின் மூலம் நேரடியாக தரும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த
உள்ளது.இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.விழாவில், ஐ.ஓ.பி., வங்கியின் தலைவர்
நரேந்திரா, வங்கி உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.