ராமேஸ்வரம்: பாம்பனில் பலத்த காற்று வீசுவதால், ஆந்திராவை சேர்ந்த மிதவை கப்பல், பாதுகாப்பு கருதி, ராமேஸ்வரம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் இருந்து 10 மாலுமிகளுடன் மும்பைக்கு புறப்பட்ட மிதவை கப்பல், நேற்று முன்தினம் பாம்பன் பகுதிக்கு வந்தது. அக்கப்பலுக்காக, பாம்பன் தூக்கு பாலத்தை டிச., 26 ல் திறக்க, அனுமதி கிடைத்தது. அப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பாம்பன் துறைமுக அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.