திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று (டிச.,24) அதிகாலை, 4:45 மணிக்கு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, 4,000 போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர்.பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், 108 திவ்ய
தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி
விழா, கடந்த, 13ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல்பத்து
உற்சவம் கடந்த, 14ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. இன்று முதல்,
ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. முதல் நாளான இன்று அதிகாலை, 3:15 மணிக்கு,
திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்பட்டது.
அதிகாலை, 4:45 மணிக்கு,
சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத
வாசலை கடந்து, திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.மூலவர், முத்தங்கி
அலங்காரத்தில் காட்சி தந்தார்.சொர்க்கவாசல் திறப்பையொட்டி, நேற்று இரவே
லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சியில் குவிந்தனர். பக்தர்களுக்கு தேவையான
வசதிகள், மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல ஐ.ஜி.,
அலக்ஸாண்டர் மோகன் தலைமையில், உயர்அதிகாரிகள் மற்றும் 4,000 போலீசார்
பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கமே விழாக்கோலம்
பூண்டுள்ளது.
தற்போது, வி.ஐ.பி., பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தரிசனத்துக்கு, வரிசையில் நிற்கும் பக்தர்கள், முன்னுரிமை
அடிப்படையில் கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கோஷ்டியூர்: சிவகங்கை, திருக்கோஷ்டியூரில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று இரவு 10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும்.
வாசலில்,
பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிப்பார். இதை தொடர்ந்து, இராப்பத்து
உற்சவத்தை முன்னிட்டு, அடுத்த 9 நாட்கள் பரமபதவாசல் திறந்திருக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.