முதுகுளத்தூர்:முதுகுளத்தூர்
பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மூவர் கைது
செய்யப்பட்டனர். முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் சில மாதங்களாக
தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. கூடுதல், எஸ்.பி., விக்ரமன்
தலைமையில், இன்ஸ்பெக்டர் குமரன், எஸ்.ஐ., விஜயகுமார் உள்ளிட்ட போலீசார்
கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வங்கி, ஜூவல்லரியில்
கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த, விருதுநகர் மாவட்டம் கல்விமடையை சேர்ந்த
வெள்ளையன், 61, கும்பகோணம் ஜெயராஜ், 43, சென்னை சூளைமேடு குப்புசாமி, 36
ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி
வருகின்றனர்.
விசாரணையில், திருச்செந்தூரில் நகைக்கடை ஒன்றில் 25 கிலோ
வெள்ளி, அரை கிலோ தங்க நகை, சென்னையில் "டாஸ்மாக்' கில் 85 ஆயிரம்,
சாயல்குடி, முதுகுளத்தூரிலுள்ள ஜூவல்லரி கடைகளில் 8 கிலோ வெள்ளி, நூறு
கிராம் தங்க நகை, முதுகுளத்தூர் "டாஸ்மாக்' கில் ஒரு லட்சத்து 48 ஆயிரம்
ரொக்கம், போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 7.5 பவுன் நகை, லேப்-டாப் உட்பட 40 கிலோ
வெள்ளி, முக்கால் கிலோ நகைகளை, கும்பலாக திருடியதை அவர்கள் ஒப்பு கொண்டனர்.
கொள்ளையடித்த பணத்தில், 2 லட்சத்து, 25 ஆயிரம் மதிப்புள்ள, ஒரு அம்பாசிடம்
கார், விலையுயர்ந்த மொபைல் போன்கள் இரண்டு, ரொக்கம் ஆயிரம் ரூபாய், 500
கிராம் வெள்ளி பொருட்கள், 68 கிராம் தங்க நகைகளை தனிப்படை போலீசார்
பறிமுதல் செய்தனர். தப்பியோடி ஒருவரை தேடிவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.