tamilnadu news | கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பள்ளி மாணவி படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பள்ளி மாணவி படுகாயம்

Added : டிச 24, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கானூர் அரசு நடுநிலைப்பள்ளியில், கொதிக்கும் சாம்பாரில் விழுந்த முதல் வகுப்பு மாணவி நூபுரகங்கா தேவி படுகாயமடைந்தார்.இப்பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கிருந்த சத்துணவு கூடம் இடிந்து விழுந்ததால், திறந்தவெளியில் சமையல் செய்கின்றனர். கடந்த இரு
நாட்களுக்கு முன்பு, சாப்பாட்டு நேரத்தில் வகுப்பு முடிந்து, மாணவிகள் கூட்டமாக வெளியேறினர். அப்போது, முதல் வகுப்பு மாணவி நூபுரகங்கா தேவி, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து விட்டார்.

அவரது உடலின் பின்பகுதி வெந்து விட்டது. அவர் படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோமளவேணி கூறுகையில், "" அரசு பள்ளிகளில் குழந்தைகளை அமரவைத்து தான், மதிய உணவு தருவோம். கானூர் பள்ளியில் வரிசையில் நிற்க செய்து வழங்கியபோது, ஒருவரை ஒருவர் தள்ளியதால், கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்ட மாணவி நூர்புர கங்காதேவிக்கு, காயம் ஏற்பட்டது. கவன குறைவாகவும், இது பற்றி தகவல் தெரிவிக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்,'' என்றார். படமாத்தூர், சக்தி சர்க்கரை ஆலை மருத்துவமனை ஊழியர் கூறுகையில்,"" உடலில் காயத்துடன் வந்த, மாணவிக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், தொடர் சிகிச்சை அளிக்கிறோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-டிச-201203:04:02 IST Report Abuse
தமிழ்வேல் // இங்கிருந்த சத்துணவு கூடம் இடிந்து விழுந்ததால், திறந்தவெளியில் சமையல் செய்கின்றனர். //
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை