ஓசூர்:ஓசூர்,
சூளகிரி அருகே, நேற்று அதிகாலை, யானை மிதித்து, விவசாயி
இறந்தார்.கர்நாடகா மாநிலம், பென்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, தமிழக
வனப்பகுதியில் நுழைந்த, 200க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி
மாவட்டத்திலுள்ள, பல மலை கிராமங்களில் புகுந்து, விவசாய பயிர்களை நாசம்
செய்து வருகின்றன.பட்டாசு வெடித்தும், தீப் பந்தங்களை கொளுத்தியும்,
வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர். அப்போது, யானைகள்
கூட்டம் கூட்டமாக, பல திசைகளில் பிரிந்து சென்றன.
இதில், 20க்கும்,
மேற்பட்ட யானைகள், மூன்று நாட்களுக்கு முன், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி,
அழியாளம் பகுதியில் புகுந்து, விவசாய பயிர்களை நாசம் செய்துவிட்டு,
தென்பெண்ணை ஆற்றை கடந்து, சானமாவு வனப்பகுதிக்கு சென்றன.
சானமாவு
வனப்பகுதியில், சுற்றி திரிந்த யானைகளை, வனத்துறையினர், மீண்டும்
விரட்டினர். கூட்டத்தில் இருந்து, பிரிந்த சில யானைகள், தனித்தனியே கிராம
பகுதிகளில் உலாவி வருகின்றன.சூளகிரி அடுத்த, பார்த்தகோட்டா கிராமத்தை
சேர்ந்தவர் விவசாயி, முனுசாமி, 60. இவர் நேற்று அதிகாலை மூன்று மணிக்கு,
வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக,
நடந்து சென்றார். இருளில், யானை வருவதை கண்ட முனுசாமி, தப்பி ஓட
முயன்றார். ஆனால், அவரை துரத்திய யானை, தும்பிக்கையால் தூக்கி மரத்தில்
அடித்து, கீழே போட்டு மிதித்துள்ளது; சம்பவ இடத்தில் உடல் நசுங்கி அவர்
இறந்தார்.காலையில், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள், முனுசாமி இறந்து
கிடந்ததை பார்த்து, வனத்துறையினருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு,
ஓசூர் வனச்சரக ஊழியர்கள் சென்று, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து
வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.