சென்னை:டில்லி
மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு, மெரீனா கடற்கரையில், இளைஞர்கள்
ஒன்று திரண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில்
கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினர், கல்லூரி
மாணவர்கள், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சென்னையில்
நேற்று மாலை, 4:00 மணிக்கு, நடிகர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்,
பெற்றோர்கள் உள்ளிட்டோர், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம்
நடத்தினர்.மெரீனா கடற்கரையில், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.
பின், உழைப்பாளர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கலங்கரை விளக்கம்
வரை சென்றனர்.மது சந்தையை கட்டுப்படுத்த வேண்டும், பாலியல் வன்முறை,
கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம்
கொண்டு வரப்பட வேண்டும், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பார்லிமென்டில்
கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும், பள்ளிகளில் பாலியல்
கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேராட்டத்தில் திரைப்பட
முன்னணி நடிகர்கள், நடிகைகள், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.