தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே, பள்ளி மாணவி புனிதாவை, கொலை செய்த கொடூரன் சுப்பையாவை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தூத்துக்குடி, செய்துங்கநல்லூர், கிளாக்குளம் சவுந்தரராஜன் மகள் புனிதா, 13; 7ம் வகுப்பு மாணவி. டிச., 20ம் தேதி காலை, பள்ளிக்கு சென்றபோது, அங்கு, காட்டுப் பகுதியில் இவரை, சுப்பையா, 37, மதுபோதையில் வழிமறித்து, கற்பழிக்க முயன்று, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.அதிகபட்ச தண்டனை வேண்டும் இவ்வழக்கில், சுப்பையாவுக்கு, கோர்ட் மூலம், அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, புனிதாவின் தாய் பேச்சியம்மாள், உறவினர்கள், கிராம மக்கள் வலியுறுத்தினர்.சம்பவத்தன்று, புனிதாவை கொலை செய்தபின், அவர், டிபன் பாக்சில் இருந்த மதிய உணவை, சுப்பையா, நிதானமாகச் சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது.குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை புனிதா கொலையோடு சேர்த்து, மொத்தம் மூன்று வழக்குகள் சுப்பையாவின் மீது இதுவரை நிலுவையில் உள்ளதால், அவரை, விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
I feel like sexual awareness,Vision about sex and strict punishment need to introduced soon in the low .This fellow looks to me like a sadist,he is just a street dog with five sense looking for a female to have sex.If a gundas or sentence to death or any level of serious punishments is same for him.he deserves it like how we throw a stone on a street dog.Please don't waste time in saying this and that punishment might be imposed on it.Reserve sentence to death soon please so that her parents will feel 0.00000000000001% happy. And l also feel such type of cases should be categorized and express judgement should be reserved within very short period.Let Punitha be the last in the world for such harassment. Lets us pray to God let her soul rest in piece.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.