tamilnadu news | மீனவர்கள் 5 பேர் உயிர் தப்பினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் 5 பேர் உயிர் தப்பினர்

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்:கச்சதீவு அருகே, வீசிய பலத்த காற்றால், விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது; மீனவர்கள், ஐந்து பேர் உயிர் தப்பினர். கடந்த, டிச., 17 முதல், பாம்பன் பகுதியில், பலத்த காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 22ம் தேதி, காற்றின் வேகம் சற்று குறைந்திருந்தாலும், நடுக்கடலில் குறையவில்லை.இதை பொருட்படுத்தாமல், ராமேஸ்வரத்தில் இருந்து, 660 விசைப் படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று காலை, கரை திரும்பினர். தங்கச்சிமடம், அற்புதம் என்பவரின் படகு, கச்சதீவு அருகே, வீசிய பலத்த காற்றால், சேதமடைந்து கடலில் மூழ்கியது.படகில் இருந்த, ஜஸ்டின், சந்திரன், ஆரோக்கியம், பிரபாகரன், செல்வம் ஆகிய, ஐந்து பேரும், உயிருக்குப் போராடினர். அங்கு வந்த, அற்புதத்தின் மற்றொரு படகில் ஏறி, ஐந்து பேரும், ராமேஸ்வரம் திரும்பினர். மூழ்கிய படகை மீட்க, மீன்துறை அனுமதியுடன் இன்று மீட்புக் குழுவினர், கடலுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். கடல் கொந்தளிப்பால், மீன்பிடிக்க முடியாமல், மீனவர்கள் பலர், 22ம் தேதி இரவில், கரை திரும்பினர். எமிரேட், செல்வம், ராஜு உள்ளிட்ட, ஐந்துக்கும் மேற்பட்டோரின் மீன்பிடி வலைகள், காற்றில் சேதமடைந்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை