விருத்தாசலம்:பிறந்த சில மணி நேரத்தில், ஆண் குழந்தையைக் காட்டில் வீசிச் சென்ற இளம் பெண்களால், விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி வனப்பகுதிக்கு, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு ஸ்கூட்டியில் வந்த இரண்டு இளம் பெண்கள், பிறந்து சில மணி நேரமே ஆன, பச்சிளம் ஆண் குழந்தையை வீசிவிட்டு வேகமாகச் சென்றனர்.அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்றனர். ஆனால் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், "சைல்டு லைன்' உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.அங்கு மருத்துவர் ராஜ்குமார் தலைமையில், செவிலியர்கள் சிகிச்சையளித்தனர்.இதுபற்றி மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் புவனேஸ்வரி கூறியதாவது:கோட்டேரி வனப்பகுதியில் கண்டெடுத்த ஆண் குழந்தைக்கு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.பின்னர், திருச்சி, சேலம், சென்னையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும். குழந்தை தத்து கேட்பவர்கள், அரசு அனுமதியுடன் நடத்தப்படும் தொண்டு நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, புவனேஸ்வரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.