கம்பம்:தமிழகம்,
கேரளாவில், ஜீப்புகளை திருடிய, கும்பலை சேர்ந்த, எட்டு பேர் கைது
செய்யப்பட்டனர்.கம்பம், உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில், கடந்த சில
மாதங்களாக, வீடுகளுக்கு முன் நிறுத்தியிருந்த ஜீப்புகள் திருட்டு போனது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், சமீபத்தில், கேரள
மாநிலம், கட்டப்பனை போலீசார், ஜீப் திருட்டு கும்பலை கைது செய்தனர்.
அவர்கள், கொடுத்த தகவலின் பேரில், உத்தமபாளையம் டி.எஸ்.பி., ஸ்டான்லி
தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கம்பம்மெட்டு அருகில் உள்ள,
கருவாக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோஷி, 35, ராஜேஷ், 28, ஜெயராஜ், 28, ஆகிய
மூவரை கைது செய்தனர்.மேலும், இவர்களின், கூட்டாளிகள், ஐந்து பேர் கைது
செய்யப்பட்டனர்.
விசாரணையில், கம்பத்தில் உள்ள தியேட்டரில், இரண்டாவது
காட்சி சினிமா பார்த்துவிட்டு, வீடுகளுக்கு முன் நிறுத்தி இருக்கும்
ஜீப்புகளை, சிறிது தூரம் தள்ளிச்சென்று, காரணம் கேட்பவர்களிடம், ஜீப்,
"ஸ்டார்ட்' ஆகவில்லை. "ஒர்க் ஷாப்'க்கு தள்ளி கொண்டு போகிறோம், என்று
கூறுவோம்; ஆளில்லாத பகுதியில், ஜீப்பை, "ஸ்டார்ட்' செய்து கடத்தி செல்வோம்.
இந்த பாணியில் கம்பத்தில் 3, குமுளியில் 3, உத்தமபாளையம், கூடலூர்,
கோம்பையில், தலா ஒன்றாக, 9 ஜீப்புகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
கம்பத்தில், திருடப்பட்ட ஜீப்புகளில் இரண்டை போலீசார் மீட்டுள்ளனர். மற்ற
அனைத்தும், ராமேஸ்வரத்தில் விற்கப்பட்டதாகத் தெரியவந்து உள்ளது.தொடர்ந்து,
போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.