வால்பாறை:வால்பாறை அருகே, மலைச்சரிவில், அரசு பஸ் உருண்ட விபத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்தது.கோவை மாவட்டம், வால்பாறை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கடந்த மாதம், 24ம் தேதி இரவு, பழநிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே, விபத்துக்கு உள்ளானது. இதில், ஏழு பேர் இறந்தனர்; படுகாயமடைந்த, 47 பேர் பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சின்கோனா (டேன் டீ) லாசன் டிவிஷனை சேர்ந்த தொழிலாளி ராமையா, 55, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, பஸ் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்து உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.