விக்கிரவாண்டி:விடுமுறை தினத்தையொட்டி வாகனங்களின் அணிவகுப்பால், விக்கிரவாண்டி டோல் கேட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிறிஸ்துமஸ்
பண்டிகையொட்டி, சென்னையில் பணிபுரியும், வெளி மாவட்ட மக்கள், பஸ்களில்
ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முன் கூட்டியே தங்களின்
வாகனங்களில் புறப்பட்டு உள்ளனர்.மேலும், சபரிமலைக்குச் செல்லும்
பக்தர்களின் வாகனங்களின் அணிவகுப்பாலும், நேற்று அதிகாலை முதல், இரவு வரை,
விக்கிரவாண்டி டோல் கேட்டில், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து
நின்றன. இதனால், டோல் கேட் ஊழியர்கள், வாகனங்களுக்கு சுங்க வரியை வசூலிக்க,
ஆறு டோல் கேட்டுகளையும் திறந்து வசூலித்தனர்.
எனினும், தொடர்ந்து
வாகனங்கள், தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வந்ததால், இரவு, 9:00 மணி
வரை, டோல் கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.