உத்தமபாளையம்:உத்தமபாளையம் பெரியாற்று மேம்பாலத்தின் இடைவெளியில் விழுந்த மாணவர் இறந்தார்.உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கார்த்திக், 10, ராஜேஷ், 13, தினேஷ், 12. இவர்கள் பள்ளி விடுமுறை தினமான டிச., 22 ல், உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றனர்.குளித்துவிட்டு, பெரியாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் மேல் ஏறி, கார்த்திக் நடந்து வந்தார். அப்போது கால்தவறி பாலங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் விழுந்தார். 40 அடி பள்ளத்தில், ஆற்றில் விழுந்ததால், படுகாயத்துடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். உத்தமபாளையம் எஸ்.ஐ., உமாதேவி விசாரித்து வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.