தேனி:"அரசு ஊழியர்' என ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்தது மட்டுமின்றி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார். மதுரை, திருப்பாலை விஸ்வநாததாஸ் நகரை சேர்ந்தவர் கவிதா, 21. இவருக்கு பெரியகுளம் தாமரைக்குளத்தில் வசிக்கும், ரவிக்குமார், 25, என்பவருடன் திருமணம் நடந்தது. "தான் அரசு ஊழியர்' என, ரவிக்குமார் கூறினார்.பெண் வீட்டார், 20 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இருவரும் பெரியகுளத்தில் வசித்தனர். மூன்று மாதங்களுக்கு பின், "ரவி, அரசு ஊழியர் இல்லை; தனியார் நிறுவன டிரைவர்' என தெரிந்தது.இதுகுறித்து கவிதா, கணவரிடம் கேட்டார். ஆனால், ரவிக்குமார், அவரது தந்தை வாசுதேவன், தாய் பத்மாவதி ஆகியோர், கூடுதலாக 5 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கவிதாவை கொடுமைப்படுத்தினர். மகளிர் போலீசில் கவிதா புகார் செய்தார். நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.