தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன். இவருக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடு, இங்கு, தாலுகா அலுவலகம் எதிரில் உள்ளது. நேற்று காலை 6 மணியளவில், இவர் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அப்போது, வீட்டில், தீ எரிவதைக்கண்ட டபேதார் முனியசாமி, அதுகுறித்து, தாசில்தாருக்கு தெரிவித்தார். ராமசுப்பிரமணியன் வந்துபார்த்தபோது, அங்கிருந்த, சேர்,கதவு, கம்ப்யூட்டர், பிரின்டர், திரைச்சீலைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. மின்கசிவே இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.