மதுரை:மதுரையில்,
வங்கி கிளைகளிலிருந்தும், வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் ரூ.79.78
லட்சம் "சுருட்டிய' அதிகாரி சாமுவேல் ரஞ்சித் ராஜாவை, 36, போலீசார் கைது
செய்தனர்.மதுரை
கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த இவர், கனரா வங்கி, பேரையூர் கிளையில்
அதிகாரியாக இருந்தார். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் "கில்லாடி' யான
இவர், வங்கியின் பிற கிளைகளின் "பாஸ்வேர்டு' பயன்படுத்தி, பல லட்சத்தை, தன்
கணக்கில் வரவு வைத்தார்.மேலும், ஏ.டி.எம்., ல் பணம் வராமல்
வாடிக்கையாளர்கள் ஏமாந்து செல்வதை பயன்படுத்தி, அவர்களின் கணக்கிலும் "கை'
வைத்தார். பெங்களூரு அலுவலகத்தில் இருந்து, "தன் வங்கி தேவைக்காக'
எனக்கூறி, 79 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் "சுருட்டியது'
தெரிந்தது.இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில், 48 லட்சத்து
68 ஆயிரத்தை, சாமுவேல் திருப்பிக் கொடுத்தார்; மீதமுள்ள தொகையை
கொடுக்கதில்லை. புகாரின்படி, அவரை மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ.,
தமிழ்ச்செல்வி கைது செய்தார். தொடர்புடைய நான்கு பேரை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.