சென்னை: வனத் துறையின் நிலத்தை, ஆக்கிரமித்ததாக, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் மீதான புகாரை, விசாரிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, ஐகோர்ட் தள்ளிவைத்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் உள்ள, பூலத்தூர் கிராமத்தை சேர்ந்த, ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:குன்னூரில் உள்ள, தேயிலை வாரியத்தின், நிர்வாக இயக்குனராக, அம்பலவாணன் உள்ளார். இவர், பூலத்தூர் கிராமத்தில் வனத் துறையின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில், கண்ணாடி மாளிகை என, அழைக்கப்படும் பழைய கட்டடம் உள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில், காபி செடி, ஆரஞ்சு மற்றும் பணப் பயிர்களை பயிரிட்டுள்ளார். இதன் மூலம், லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அலுவலக காரில், பூலத்தூர் கிராமத்துக்கு வருவது வழக்கம்; பதவியை தவறாக பயன்படுத்துகிறார். தனது ஆட்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் மூலம், நியாயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மத்திய சிவில் பணி விதிகள், இவருக்கு பொருந்தும். இவரது அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு, இம்மாதம், 11ம் தேதி, மனுக்கள் அனுப்பினேன். எனவே, அதிகாரி அம்பலவாணனின், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து, விரிவான விசாரணை நடத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள, சென்னை ஐகோர்ட்டின், முன்னாள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.