ஐகோர்ட்டில் 11 நீதிபதிகள் பதவி நியமனம் எப்போது?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது, ஐகோர்ட்டில், 11 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. ஐகோர்ட்டுக்கு, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்ட பின், காலியிடங்களுக்கு பரிந்துரை பட்டியலை அனுப்ப, சில மாதங்கள் ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பரபரப்பு உத்தரவுகள்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக, 2010 ஜூன், 11ம் தேதி, இக்பால் பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள், ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
விடுமுறை நாட்களில் குடும்ப நல கோர்ட்டுகள் இயக்கம், 170 க்கும் மேற்பட்ட சிவில் நீதிபதிகள் நியமனம், என, நிர்வாக ரீதியாக, பல நடவடிக்கைகளை எடுத்தார்.சமச்சீர் கல்வி, பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு, படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை, விதிமீறல் கட்டடங்களின் மீது நடவடிக்கை என, பல வழக்குகளில்,பரபரப்பான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.தலைமை நீதிபதியாக இக்பால் இருந்த காலகட்டத்தில், 2011ம் ஆண்டு, டிசம்பரில், நான்கு நீதிபதிகளும், இந்த ஆண்டு, மார்ச் மாதத்தில், ஒரு நீதிபதியும் நியமிக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில், நான்கு பேர், மாவட்ட நீதிபதிகளாக இருந்து, பதவி உயர்வு பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே, வழக்கறிஞராக இருந்து, நீதிபதியாக ஆனவர்.
நவம்பரில், ஐகோர்ட்டில், 10 நீதிபதிகள் பதவி காலியாக இருந்தது. காலியிடங்களை நிரப்புவதற்காக, வழக்கறிஞர்களின் பட்டியல் தயாரானது என்றும், ஆனால், அந்தப் பட்டியலை இறுதி செய்ய, தலைமை நீதிபதி அடங்கிய குழு, ஒன்று கூட முடியாமல் போனது என்றும் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்புசுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, இன்று, இக்பால் பொறுப்பேற்கிறார். ஐகோர்ட்டுக்கு தற்காலிக தலைமை நீதிபதியாக, தர்மாராவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக வரப் போவது யார், என்கிற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.ஐகோர்ட்டுக்கு, புதிய தலைமை நீதிபதி வந்த உடன், காலியிடங்களுக்கு பரிந்துரையை அனுப்ப, சில மாதங்கள் ஆகும் என, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களை, ஐகோர்ட் தலைமை நீதிபதியும், அவரை அடுத்த, இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு தான், தேர்ந்தெடுத்து இறுதி செய்யும். பின், இந்த பரிந்துரை பட்டியல், சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்படும்.அதேநேரத்தில், கால தாமதம் ஆவதை தவிர்க்கும் வகையில், தற்காலிக தலைமை நீதிபதி அடங்கிய குழு, பரிந்துரை அனுப்புவதில், தடை ஏதும் இல்லை என்கிற கருத்தும் உள்ளது. அடுத்த ஆண்டில் மட்டும், 10 நீதிபதிகள் ஓய்வு பெறுவதன் மூலம், 10 இடங்கள் காலியாகிறது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய குழு, பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தால், நியமன உத்தரவை, ஜனாதிபதி பிறப்பிப்பார். பரிந்துரை பட்டியலில் இடம் பெறுபவர்கள் அனைவருக்கும், நியமனம் கிடைக்கும் என, கூற முடியாது; பட்டியலில் உள்ளவர்களில், சிலர் விடுபடவும் வாய்ப்பு உண்டு.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karam chand Gandhi - Auroville,இந்தியா
24-டிச-201210:20:53 IST Report Abuse
Karam chand Gandhi வழக்கறிஞர்களாக இருந்து வருபவர்களை நீதிபதி ஆக்குவது மிக மிக தவறு. அவர்கள்தான் நீதித்துறையை பணம் சம்பாதிக்க தொழிலாக்கி விடுகிறார்கள். பதவி உயர்வு மூலமாக வரலாம் அல்லது IJS உருவாக்கி அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நேர்மையான நீதிபதிகள் இந்த நாட்டிற்கு தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்