புதுடில்லி:""எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது போல, பிற்படுத்தப்பட்டோருக்கும் கொண்டு வர வேண்டும்; அவ்வாறு மசோதா கொண்டு வரப்பட்டால், அதை, பகுஜன் சமாஜ் ஆதரிக்கும்,'' என, அந்த கட்சியின் தலைவர், மாயாவதி கூறினார்.
மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, இடர்பாடான நேரங்களில் எல்லாம் காப்பாற்றும் கட்சியாக, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சி விளங்குகிறது.மாயாவதியின் வற்புறுத்த லால், அரசு பணியில் இருக்கும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீட்டின் படி, பதவி உயர்வு வழங்க வகை செய்யும் மசோதா, ராஜ்யசபாவில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், "எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் ஆதரவான அரசியல் தலைவர் தான் இல்லை; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிராமணர்களுக்கு ஆதரவானவர் தான்' என்பதை, தெரிவிக்கும் வகையில், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த, பிரத்யேக பேட்டியில், மாயாவதி கூறியுள்ளதாவது:
அரசு பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு, இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, தனியாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த மசோதாவை நான் ஆதரிப்பேன்.
பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவான கட்சி என கூறி கொள்ளும், சமாஜ்வாதி கட்சி, அந்த பிரிவினருக்காக எதையும் செய்யவில்லை.ஆட்சிக்கு வந்து, ஒன்பது மாதங்கள் ஆகிறது; பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்களுக்கு, சமாஜ்வாதி எதுவுமே செய்யவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி, முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை.
உயர் ஜாதியினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடாது என்ற எண்ணம் கொண்டது சமாஜ்வாதி.அரசு வேலைவாய்ப்புகளில், உயர் ஜாதியினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, நான் தான் நீக்கினேன். நான், அனைத்து சமுதாயங்களுக்கும் பொதுவானவள்.இவ்வாறு, மாயாவதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.