பெங்களூரு:""காவிரி
நதி நீர் பங்கீடு விவகாரத்தில், கர்நாடக மாநிலத்துக்கு துரோகம்
இழைக்கப்பட்டுள்ளது,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம்
சாட்டினார்.கர்நாடகா, ஹாசன் மாவட்டம், பேலூரு அருகிலுள்ள ஹேமாவதி உள்ளிட்ட
ஆற்றுப் பகுதிகளை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:தமிழக முதல்வராக
ஜெயலலிதா பதவியேற்கும் போதெல்லாம், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை துவக்கி
விடுகிறார். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விஷயத்தில், கடைபிடிக்கப்பட்ட
விதிமுறைகள், காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை.
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது, பிரதமரின்
கடமை. இதை அவரிடம் வலியுறுத்துவேன்.தமிழக எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள்
ஒற்றுமையுடன் செயல்பட்டு, பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து, தங்களுக்கு
தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்,
எதிலும் பின்தங்கி விடுகிறோம்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக,
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், குழு ஒன்றை அழைத்துச் சென்று, பிரதமரை
சந்திப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை பிரதமரை சந்திக்க அனுமதி
கிடைக்கவில்லை என, கூறி வருகிறார்.காவிரி நதி நீர் பிரச்னைகளுக்கான தீர்வு
குறித்து விவாதிக்கவும், தீர்மானிக்கவும் முதல்வர் ஷெட்டர் முன்வரவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, இம்மாதம் 31ம் தேதி, அரசிதழில்
வெளியாக உள்ளது. அதற்குள், ஷெட்டர் இறுதி முடிவெடுக்க வேண்டும்.கர்நாடக
எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து,
மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, தேவகவுடா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசியல்வாதிகள் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும், தமிழ் நாடு அரசியல்வாதிகள் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் பாலிடிக்ஸ் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயா கோர்ட் சென்று தீர்ப்பு வாங்கியது பாராட்ட வேண்டிய ஒன்று. ஆனால் அதே சமயத்தில் இதற்கு அரசியல் தீர்வு வேண்டும். காடுகளை அழித்து வருவதால் பருவமழை பொய்த்து வருகிறது. தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் காவிரி வைத்து விவசாயம் செய்யும் விளை நிலங்கள் அதிகமாகி விட்டன. வரும் காலங்களில் நீர் சேகரிப்புத்தான் நம்மை காப்பாறும் (இரு மாநிலங்களிலும்). நம்மை விட பத்தில் ஒரு பங்கு மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் தொழில் நுட்பத்தை வைத்து விவசாயம் ஜோராக நடக்கிறது. மத்திய அரசு இதில் முனைப்பு காட்டலாம். நன்கு மழை பெய்யும் சமயங்களில் தமிழ்நாட்டில் உள்ள குளம் ஏரிகளை இணைத்து காவிரி நீரை தேக்கி வைக்கலாம். நெல் பயிரை விட்டு, தண்ணீர் குறைவான பயிர்களை விளைவிக்கலாம். மாற்று வழிகள் தேவை. தமிழகத்தை பொருத்தவரை, ஒரு பக்கம் கோர்டில் நம் உரிமையை நிலை நாட்ட வேண்டும். மறு பக்கம் மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.