இமாச்சல் முதல்வராக நாளை பதவியேற்கிறார் வீர்பத்திர சிங்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிம்லா:இமாச்சல பிரதேச முதல்வ ராக, ஆறாவது முறையாக, நாளை பதவியேற்கிறார் வீர்பத்திர சிங்.மலை மாநிலமான, இமாச்சல பிரதேசத்தில், நவம்பர், 4ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், பதிவான ஓட்டுக்கள், இம்மாதம், 20ம் தேதி எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள, 68 தொகுதிகளில், 36 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.இதையடுத்து, நேற்று முன் தினம் இரவு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக, 78 வயதான, வீர்பத்திர சிங் தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே, இமாச்சல பிரதேச முதல்வராக, 1983 முதல், 2003 வரை, ஐந்து முறை பதவி வகித்துள்ள இவர், ஆறாவது முறையாக, நாளை பதவியேற்க உள்ளார்.மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் துறை அமைச்சராக, 2011 ஜனவரி முதல் பதவி வகித்த வீர்பத்திர சிங் மீது, ஊழல் வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து, ஜூன் மாதம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்கிய, காங்கிரஸ் மேலிடம், அவரது தலைமையில் சட்டசபை தேர்தலை சந்தித்தது.சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம், தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம், ஓரங்கட்டி விட்டு, மீண்டும் முதல்வராக முடி சூட்டப் போகிறார் வீர்பத்திர சிங்.சட்டசபை கட்சித் தலைவராக தேர்வான பின், நிருபர்களிடம் பேசிய, அவர் கூறியதாவது:
அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை நன்கு உணர்ந்தவனாக, சகிப்புத் தன்மை கொண்டவனாகவே இன்றும் நான் உள்ளேன். மாநிலத்தின் முதல்வராக, முதல் முறை பதவியேற்ற போது, என்ன உறுதிப்பாடு மற்றும் உத்வேகத்துடன் இருந்தேனோ, அதே நிலை இப்போதும் தொடர்கிறது.மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றியதன் மூலம், எனக்கு கிடைத்த நீண்ட அனுபவம், மாநிலத்தை தற்போதைய திவால் நிலையிலிருந்து மீட்க உதவும். ஊழல் பேர்வழிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன். அரசு நிர்வாகம் என்பது, ஒரு குதிரை போன்றது. அந்த குதிரையை ஓட்டுபவர், நல்லவராக இருந்தால், அரசு நிர்வாகமும் சரியாக நடக்கும்.இவ்வாறு வீர்பத்திர சிங் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்