புதுடில்லி:டில்லி,
உ.பி., உட்பட வட மாநிலங்களில், தற்போது கடும் குளிர்காற்று வீசுகிறது.
இதனால், நேற்று காலையில், ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்தில்
பாதிப்பு ஏற்பட்டது.தலைநகர் டில்லியில், நேற்று அதிகாலை வெப்பநிலை, 5.9
டிகிரி செல்சியசாக இருந்தது. சாலைகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
கடும் பனி மூட்டம் காரணமாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான
நிலையத்தில், ஒரு மணி நேரத்திற்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால், 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன; இரண்டு விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன.பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும், நேற்று கடும் குளிர்காற்று
வீசியதோடு, மூடுபனியும் காணப்பட்டதால், பல பகுதிகளில், சாலை மற்றும் ரயில்
போக்குவரத்தில், பாதிப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பல
பகுதிகளில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடும் குளிருக்கு
ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், மூன்று பேர் பெண்கள். மாநிலத்தின்
பல பகுதிகளில், கடும் மூடுபனி நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கையில்
பாதிப்பு ஏற்பட்டது. இம்மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நிர்வாகங்கள், ஜன., 5ம்
தேதி வரை பள்ளிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.