சபரிமலை:மண்டல
பூஜை முடிந்து, சபரிமலை நடை, வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு
அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக, 30ம் தேதி மாலை
திறக்கப்படும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ., 16ம் தேதி துவங்கிய
மண்டல காலம், நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரன்முளாவில் இருந்து,
இம்மாதம், 22ம் தேதி புறப்பட்ட தங்க அங்கி பவனி, நாளை நண்பகலில், பம்பை
வந்தடையும்.மாலை, 3:00 மணிக்கு, பெட்டியில் அங்கியை வைத்து, பக்தர்கள்
சன்னிதானம் கொண்டு வருவர். சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கியை, மாலையில்,
கோவிலின் தலைமை பூசாரி பெற்று, அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவித்து
தீபாராதனை நடத்துவார்.வரும், 26ம் தேதி பகல், 12:30 மணிக்கு மண்டல பூஜை
நடக்கிறது. அன்று காலை, 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும்.
மண்டல பூஜை நிறைவடைந்ததும், மதியம் மூடப்படும் கோவிலின் நடை, மீண்டும்
மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு,
10:00 மணிக்கு மூடப்படும்.அதன்பின், பக்தர்கள் பம்பையில் இருந்து
சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகர விளக்குக்கான
ஏற்பாடுகளும் நடைபெறும். மகர விளக்கு பூஜைக்காக, வரும், 30ம் தேதி மாலை நடை
திறக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.