புதுடில்லி:மாணவி
கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆறு குற்றவாளிகளில், மூன்று
பேர், நேற்று, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில், வினய் மற்றும் பவன் ஆகியோர், குற்றவாளிகளை அடையாளம் காணும்,
அடையாள அணிவகுப்புக்கு செல்ல மறுத்து விட்டனர்.மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள்,
"எங்களுக்கு அடையாள அணிவகுப்பு தேவையில்லை. மிகப் பெரிய குற்றத்தை செய்து
விட்டோம்; எங்களை தூக்கில் போடுங்கள்' என்றனர். இதையடுத்து, அவர்களை,
அடுத்த மாதம், 6ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட்
உத்தரவிட்டார். இதற்கிடையே, குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்ட கோர்ட்டின்
முன், ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டனர். "குற்றவாளிகள் சார்பில், எந்த
வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது' என, வழக்கறிஞர் சங்கம் சார்பில், தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
போலீசார் காயம்
டில்லியில் நேற்று நடந்த
போராட்டத்தில், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே, பல இடங்களில் மோதல்
நடந்தது. போலீசார் தடியடி நடத்தியதிலும், மாணவர்கள் கல் வீசி
தாக்கியதிலும், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் தரப்பில், 45 பேர் காயமடைந்ததாகவும், அதில் ஒரு சிலர்,
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போலீஸ்
உயரதிகாரிகள் சிலருக்கும், பலத்த காயம் ஏற்பட்டது. இது தவிர, செய்தி
சேகரிக்கச் சென்ற, பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தார்.
தினமும் விசாரணைஐகோர்ட் அறிவிப்பு
டில்லி ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை:
கற்பழிப்பு
உள்ளிட்ட, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை, டில்லியில் உள்ள, அனைத்து
கீழ் கோர்ட்டுகளும், தினமும் விசாரிக்க வேண்டும். கற்பழிப்பு என்பது, ஒட்டு
மொத்த, தேசத்தையுமே, உலுக்கும் வகையிலான சம்பவம். எனவே தான், டில்லி மாணவி
கற்பழிக்கப்பட்ட வழக்கை, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி, தானாக முன்வந்து,
விசாரணைக்கு எடுத்துள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை குழுவில் யார்?நீதிபதி முடிவு செய்வார்
டில்லி
சிறப்பு போலீஸ் கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) தர்மேந்திரா யாதவ்
கூறியதாவது:மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு குறித்து
விசாரிப்பதற்காக, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த
குழுவில், யார் யார் இடம் பெறுவர் என்பதை, சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற
தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா, முடிவு செய்வார்.
டில்லியில் பெண்களுக்கு
எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,
கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான, தண்டனையை அதிகரிப்பது
குறித்தும், இந்த குழு ஆய்வு செய்யும்.இவ்வாறு தர்மேந்திரா யாதவ்
கூறினார்.
போலீசார் மீதுமுதல்வர் பாய்ச்சல்
டில்லி முதல்வர் ஷீலா
தீட்ஷித், நேற்று மாலை, மாநில அமைச்சரவையின் அவசர கூட்டத்தைக் கூட்டினார்.
இந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:மாணவி கற்பழிப்பு சம்பவம், அதிர்ச்சி
அளிக்கிறது. இது, மிகப் பெரிய குற்றச் செயல். இதற்காக நடத்தப்பட்ட
போராட்டத்தை, போலீசார் சரியாகக் கையாளவில்லை. ஒரு சில போலீசாரை,
"சஸ்பெண்ட்' செய்வதால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. உயர் போலீஸ்
அதிகாரிகள், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். வி.ஐ.பி.,க்களுக்கு
பாதுகாப்பு அளிப்பதை காரணம் காட்டி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்
பணியிலிருந்து, தவறிவிடக் கூடாது.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.