இம்பால்:மணிப்பூரில்,
பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள், சினிமா நடிகையை தாக்கியதை கண்டித்து,
இரண்டாவது நாளாக நேற்றும், "பந்த்' நடந்தது.
இதில், வன்முறை
வெடித்ததால், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு
நடத்தி, போராட்டக்காரர்களை, போலீசார் கலைத்தனர். போலீஸ் துப்பாக்கிச்
சூட்டில், "டிவி' நிருபர் கொல்லப்பட்டார்."வட கிழக்கு மாநிலங்களில்
வசிக்கும், நாகா இனத்தை சேர்ந்தவர்களுக்கு, தனி நாடு வேண்டும்' என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, என்.எஸ்.சி. என்., - ஐ.எம்., என, அழைக் கப்படும்,
நாகலிம் தேசிய சமுதாய கவுன்சிலை சேர்ந்தவர்கள், ஆயுதம் ஏந்தி, போராட்டம்
நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், 18ம் தேதி, மணிப்பூரின் சேண்டல்
மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பிரபல
நடிகை, மொமொகா, நிகழ்ச்சி தொகுப்பாளராக கலந்து கொண்டார்.அப்போது, என்.எஸ்.
சி.என்., அமைப்பைச் சேர்ந்த சிலர், நடிகை மொமொகாவை, தாக்கியதுடன்,
அவரிடம், தவறாகவும் நடந்து கொண்டனர். இதைக் கண்டித்து, மாணிப்பூர் மாநில
திரைப்பட சங்கத்தினர், நேற்று முன் தினம், "பந்த்'துக்கு அழைப்பு
விடுத்திருந்தனர்; நேற்றும், பந்த் தொடர்ந்தது.திரைப்பட சங்கத்தினருடன்,
பொதுமக்களில் ஒரு பிரிவினரும், போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல
பகுதிகளில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தும் இயங்கவில்லை.
இம்பால் உள்ளிட்ட, பல இடங் களில், சாலைகளில், டயர்களை தீ வைத்து எரித்தனர்.
இவற்றை
அகற்றச் சென்ற போலீசார் மீது, கற்களை வீசி தாக்கினர். இதனால்,
போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசாரின் வாகனங்கள்,
தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கலைப்பதற்காக, போலீசார்,
தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.பின்,
துப்பாக்கிச் சூடும் நடத்தினர்; துப்பாக்கிச் சூட்டில், தனியார், "டிவி'
நிருபர் ஒருவர், மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார்.இதையடுத்து, இம்பால்
உட்பட, பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பந்த்
காரணமாக, மணிப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.