E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குழந்தையை பறிகொடுத்த தம்பதி : மருத்துவமனையில் உண்ணாவிரதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
01:05

மும்பை:மருத்துவமனையில், குழந்தை காணாமல் போனதால், கண்டுபிடித்து தர கோரி, பெற்றோர், இரண்டு நாட்களாக, மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மும்பை போரிவ்லி பகுதியை சேர்ந்தவர், அபிஷேக் மகாபங்கர். கர்ப்பிணி மனைவியான, ஜாஸ்மினை, நவ்ரோஸ்ஜீ மருத்துவமனையில், அக்டோபர் மாதம் சேர்த்தார். 22ம் தேதி, ஜாஸ்மினுக்கு, அழகான, ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், 24ம் தேதி, திடீரென குழந்தை காணாமல் போய்விட்டது. மருத்துவமனையில், ஜாஸ்மின் இருந்தபோது, யாரோ குழந்தையை தூக்கி சென்று விட்டனர்.குழந்தையை இழந்த, அந்த இளம் தம்பதி, கண்டுபிடித்து தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு பார்த்தனர். "இதோ கண்டுபிடிக்கிறோம்; அதோ கண்டுபிடிக்கிறோம்' என, இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன; குழந்தை கிடைத்த பாடில்லை.இதனால், மிகுந்த வருத்தமடைந்த, அபிஷேக் - ஜாஸ்மின் தம்பதி, 20ம் தேதி, மருத்துவமனை முன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் தெரிய வந்தது. புகார் பெற்றிருந்த போதிலும், சோம்பேறித்தனமாக இருந்த போலீஸ், குழந்தையை இழந்த தம்பதி உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து, சுறுசுறுப்பாக விசாரிக்க துவங்கியது.மாவட்ட போலீஸ் அதிகாரி, நேற்று காலை, மருத்துவமனை வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியிடம், "குழந்தையை கண்டுபிடித்து தருகிறோம்; உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்' என கேட்டார்.அதையடுத்து, அந்த தம்பதி, உண்ணாவிரதத்தை கைவிட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.