ஒட்டன்சத்திரம்:""திட்டங்கள் விரைந்து செயல்படுத்திவருவதால், மின்வெட்டு படிப்படியாக குறைந்து வரும் ஜூன் முதல் மின் வெட்டு பிரச்னை இருக்காது,'' என, அமைச்சர் விசுவநாதன் பேசினார்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வீரலப்பட்டி ஊராட்சியில் பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் ஆடுகள் வழங்கும் விழா நடந் தது.
டி.ஆர்.ஓ., மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் நல்லசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ஹேமலதா வரவேற்றார்.
அமைச்சர் விசுவநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
இந்த ஆண்டு கல்வித்துறைக்கு மட்டும் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
கட்சி, மதம், ஜாதி பாகுபாடின்றி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். மின்வெட்டு என்பது தற்காலிக பிரச்னை தான்.
திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் மின்வெட்டு படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் முதல் மின் வெட்டு பிரச்னை இருக்காது, என்றார்.
ஆர்.டி.ஒ., ரவிச்சந்திரன், தாசில்தார் தாஜூதின், முன்னாள் எம்.பி., குமாரசாமி, ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய துணை தலைவர் உதயம்ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் அமிர்தசெல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவிகுணசேகரன், செல்லத்துரை, புஷ்பம், நகராட்சி துணை தலைவர் ஜமால்தீன், ஜோதிமுத்து, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.